பாட­சாலை மாண­வர்­க­ளுக்கும் மேல­திக வகுப்­பு­க­ளுக்குச் செல்லும் மாண­வர்­க­ளுக்கும் ஆபாசப் படங்கள் அடங்­கிய இறு­வட்­டுக்­களை விற்­பனை செய்­து­வந்த வர்த்­தகர் ஒரு­வரை கண்டி பொலிஸ் நிலைய குற்­றத்­த­டுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்­த­துடன் 50 ஆபாசப் படங்கள் அடங்­கிய இறு­வட்­டுக்­க­ளையும் கைப்­பற்­றி­யுள்­ளனர். 

பொலி­ஸா­ருக்குக் கிடைக்­கப்­பெற்ற இர­க­சியத் தக­வல்­க­ளை­ய­டுத்து குற்­றத்­த­டுப்புப் பிரிவு பொறுப்­ப­தி­காரி எச்.ஏ.டி. ஜய­சிங்க தலை­மையில் சார்ஜன்ட் உபாலி, பொலிஸ் கான்ஸ்­ட­பிள்­க­ளான குமார, பெரேரா ஆகி­யோரைக் கொண்ட குழு­வினர் கண்டி குட்செட் பஸ் நிலையப் பகு­தியில் அமைந்­துள்ள வர்த்­தக நிலை யம் ஒன்றில் திடீர் சோதனை மேற்­கொண்­டனர். 

இதன்­போது அங்கு ஆபாசப் படங்கள் அடங்­கிய 50 இறு­வட்­டுகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. குறித்த வர்த்­தகர் இவற்றை கம்­பஹா பிர­தே­சத்­தி­லி­ருந்து நபர் ஒருவர் தனக்குக் கொண்­டு­வந்து தரு­வதாகப் பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­துள்ளார். பொலி ஸார் வர்த்தகரை கைதுசெய்து நீதிமன்றத் தில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுத்துள் ளனர்.