கிண்ணியா குரங்குபாஞ்சான் விவகாரம் : இன உறவை சீர்குலைக்க முயற்சிக்க வேண்டாம் - இம்ரான் எம்.பி.

09 Oct, 2023 | 04:48 PM
image

முழுமையாக முஸ்லிம்கள் வாழும் கிண்ணியா குரங்குபாஞ்சான் கிராமத்துக்கு பௌத்த பிக்குகள் விஜயம் செய்து, அங்குள்ள பழைய இராணுவ முகாம் காணியை பார்வையிட்டுச் சென்றுள்ளமை பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இன உறவை சீர்குலைக்க முயற்சிக்க வேண்டாம் என சம்பந்தப்பட்டோரை நான் கேட்டுக் கொள்கிறேன் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.  

ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்த அவர், அதனூடாக மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :

கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவின் மஜீத் நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில் குரங்குபாஞ்சான் கிராமம் உள்ளது. இது ஒரு விவசாயக் கிராமமாகும். விடுதலைப்புலிகள் புரிந்துணர்வு உடன்படிக்கை காலப்பகுதியில் சர்வதேசம் வரை இக்கிராமம் பற்றி பேசப்பட்டுள்ளது. இங்கு முழுமையாக முஸ்லிம்களே வாழ்ந்து வருகின்றனர். 

இங்கு இராணுவ முகாமொன்று இருந்து தற்போது இராணுவத்தினர் அகன்று சென்றுள்ளனர். இந்நிலையில், இராணுவ முகாம் அமைந்திருந்த இக்காணியை பௌத்த பிக்கு ஒருவர் தலைமையிலான குழுவினர் அண்மையில் பார்வையிட்டுச் சென்றுள்ளனர். 

இது அங்கு வாழும் மக்களிடையே சந்தேகத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. பல்லாண்டு காலம் சமூகமாக மக்கள் வாழ்ந்து வரும் பகுதியில் இவ்வாறு செயற்படுவது இன உறவைச் சீர்குலைக்கும் முயற்சியாக அமைந்து விடும். 

எனவே, அதிகாரிகள் என்ற வகையில் கிண்ணியா பிரதேச செயலாளரும், திருகோணமலை அரசாங்க அதிபரும் இது விடயத்தில் உடன் கவனம் செலுத்த வேண்டும். அதேபோல கிண்ணியா பிரதேச ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் ஏ.எல்.அதாவுல்லா எம்.பியும், ஆளுங்கட்சி என்ற வகையில் கிண்ணியாவுக்கான ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளரும் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி உயர்மட்டத்தின் கவனத்துக்கு இதனைக் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்விடயத்தில் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க நான் தயாராக இருக்கின்றேன். 

இவ்வாறு அவர் அறிக்கையில் ‍தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யானை சின்னத்தில் போட்டியிடும் இ.தொ.கா: வெளியானது...

2024-10-08 23:45:49
news-image

மத்திய கிழக்கு போர் சூழலால் இலங்கையில்...

2024-10-08 17:09:54
news-image

உள்நாட்டு விவசாயிகளின் நலன் கருதியே இறக்குமதி...

2024-10-08 17:11:01
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து புதிய...

2024-10-08 17:09:23
news-image

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை முருகன்...

2024-10-08 21:08:36
news-image

தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்ப முடிவு திகதி...

2024-10-08 21:01:37
news-image

பலத்த மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம்...

2024-10-08 19:34:32
news-image

முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தேடி அகழ்வுப்...

2024-10-08 18:55:58
news-image

பாராளுமன்றத் தேர்தல் ; வேட்பாளர்களைத் தெரிவு...

2024-10-08 17:28:25
news-image

சீன இராணுவ பாய்மரக் கப்பலுடன் கூட்டு...

2024-10-08 17:15:40
news-image

தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்திற்கும் யாழ். மாவட்ட...

2024-10-08 17:25:54
news-image

ஓடையில் தவறி வீழ்ந்து நான்கு வயது...

2024-10-08 17:56:10