முல்லைத்தீவில் நீதிகோரி கறுப்பு துணி கட்டி கண்டன போராட்டம்

Published By: Vishnu

09 Oct, 2023 | 02:09 PM
image

முல்லைத்தீவு இளைஞர்களின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜாக்கு நீதி கோரி கண்டன போராட்டம் ஒன்று திங்கட்கிழமை (09) முன்னெடுக்கப்பட்டிருந்தது.

திங்கட்கிழமை (09) காலை 10.15 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கறுப்பு துணியால் வாயினை கட்டியவாறு அமைதியாக கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்ட பின்னர் மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனிம் நீதி அமைச்சின் செயலாளருக்கு கையளிக்க மகஜர் கையளிக்கப்பட்டது.

முல்லைத்தீவில் திட்டமிட்டு நடத்தப்படும் அத்துமீறல் குடியேற்றம் மற்றும் நீதிபதிக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் அத்தோடு இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதாக கூறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

குறித்த கண்டன போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீதிபதிக்காக நீதி கேட்கும் இந்த நாட்டில் சாதாரண மக்களுக்கு என்ன நீதியோ? , நீதியின் கழுத்தில் தூக்கு கயிறு தீர்த்து போனதா நியாயத்தின் உணர்வு, நீயும் பெண்தானே நீதி கிடைக்காத பெண்களுள் நீயும் ஒருதியோ? நீதி தேவதையே, தொடர்ந்து நடந்தேறும் நீதி புரள்வுகளுக்கு என்ன தீர்ப்பு நீதி அமைச்சே? போன்ற பல்வேறு வாசகங்களையுடைய பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த போராட்டத்தில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், மதகுருமார், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் இ.ஜெகதீஸ்வரன், சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். நாவாந்துறையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்...

2024-04-15 07:43:44
news-image

இன்றைய வானிலை

2024-04-15 06:18:46
news-image

நுவரெலியா - மீபிலிபான இளைஞர் அமைப்பின்...

2024-04-15 03:09:11
news-image

தமிழினப் படுகொலையின் 15ஆவது ஆண்டில் ‘இனப்படுகொலையின்’...

2024-04-15 02:53:31
news-image

வயிற்றுவலி மற்றும் வயிற்றோட்டம் ஏற்பட்ட இளம்...

2024-04-15 00:26:54
news-image

பொது வேட்பாளர் விடையத்தை குழப்ப பலர்...

2024-04-14 23:04:21
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : கறுப்பு...

2024-04-14 20:56:22
news-image

பலாங்கொடையில் இளைஞர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக்கொலை!

2024-04-14 19:44:28
news-image

வெளி மாகாணங்களிலிருந்து கொழும்புக்கு வரும் மக்களுக்காக...

2024-04-14 18:31:44
news-image

நாட்டில் பல இடங்களில் இடியுடன் கூடிய...

2024-04-14 17:58:50
news-image

புதுவருட தினத்தில் காணாமல்போனவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டம்!

2024-04-14 17:45:32
news-image

தமிழ் மக்களின் திடமான அரசியல் கொள்கைக்கு...

2024-04-14 15:05:29