இலங்கையில் மக்களின் உயிரைப் பணயம் வைத்து வாகனம் செலுத்துகிறார்கள் - வெளிநாட்டு பயணி தெரிவிப்பு

Published By: Digital Desk 3

09 Oct, 2023 | 10:57 AM
image

இலங்கை பஸ்களில் பயணிப்பதை ஆபத்தானதாக கருதுவதாக ரஷ்ய சுற்றுலா பயணி ஒருவர் பொலன்னறுவை பொலிஸில் முறைப்பாடளித்துள்ளார்.

இலங்கை பஸ்கள் அதிவேகமாகவும் அலட்சிய போக்கிலும் பயணிப்பதாகவும் இது உயிருக்கு ஆபத்தானது எனவும் குறித்த  ரஷ்ய சுற்றுலா பயணி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் அழகைக் காணும் நோக்கில் கொழும்பில் இருந்து பொலன்னறுவைக்கு பஸ்ஸில் சென்ற போது குறித்த பஸ் சுமார் 95 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்தது எனவும், சில நேரங்களில் பிரதான வீதிகளில் 100 கிலோ மீற்றர் வேகத்தை தாண்டியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது கூகுள் மேப் எப்பை பயன்படுத்தி வேகத்தைப் பதிவு செய்துள்ள அவர் சாரதியிடம் வேகத்தைக் குறைத்து  பாதுகாப்பாக அழைத்துச் செல்லுமாறு கூறிய போதும் அதற்கு அவர் செவி கொடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

அத்துடன், அதிகாரிகள் பொது போக்குவரத்து வாகனங்களை மணிக்கு மணிக்கு 60 கிலோமீற்றருக்கு மேற்படாத வேகத்தில் செலுத்துமாறு சாரதிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்குமாறும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவின் 76ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு...

2025-01-25 17:28:34
news-image

இலத்திரனியல் அடையாள அட்டை திட்டம் பற்றிய...

2025-01-25 17:20:58
news-image

நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தின் புனரமைப்பு செய்யப்பட்ட...

2025-01-25 17:12:59
news-image

கல்கிஸை துப்பாக்கிப்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான...

2025-01-25 17:22:19
news-image

கிளிநொச்சியில் புதையல் தோண்ட முயற்சித்த 10...

2025-01-25 17:19:54
news-image

சர்வதேச மனித உரிமைகள் மற்றும் உலகலாவிய...

2025-01-25 16:55:25
news-image

முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷனவின் வழக்கு...

2025-01-25 16:46:49
news-image

சுற்றுலாத் துறையை மேம்படுத்த புதிய ரயில்...

2025-01-25 16:51:04
news-image

நுவரெலியாவில் மோட்டார் சைக்கிள் விபத்து ;...

2025-01-25 16:21:27
news-image

கந்தேகெதர செரண்டிப் தோட்டப் பாதையை சீரமைத்து...

2025-01-25 16:22:22
news-image

ஜனாதிபதி நிதியத்தின் பிரதேச மட்டத்திலான சேவைகள்...

2025-01-25 15:32:55
news-image

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண...

2025-01-25 15:31:49