தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்ட விவகாரம் தொடர்பில் கைதுச் எய்யப்ப்ட்டுள்ள முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்களில் ஒருவரான வேலாயுதம் விஜேய் குமார் என்பவரை மீள பயங்கரவாத புலனாய்வாளர்களின் (ரி.ஐ.டி.) பொறுப்பில் எடுத்து விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே பயங்கரவாத புலனயவுப் பிரிவின் வவுனியா அலுவலகம் ஊடாக கைது செய்யப்ப்ட்ட அவர் பொலிஸ் விசாரணையின் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்ப்ட்டுள்ள நிலையிலேயே எதிர்வரும் 20,21 மற்றும் 22 ஆம் திகதிகளில் மீள பயங்கரவாத புலனயவுப் பிரிவினரால் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு வெளியில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் சிறப்பு விசாரணையாளர்களால் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை செய்யப்படவுள்ளதாக பயங்கரவாத புலனயவுப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான அனுமதி கிளிநொச்சி நீதிவான் ஏ. ஆனந்த ராஜவிடம் பெறப்பட்டுள்ளதாகவும் சதி தொடர்பிலான விசாரணைகளின் சில இடங்களை காண்பித்து முன்னெடுக்கப்பட வேண்டிய விசாரணைத் தேவை கருதி இவ்வாறு அவர் சிறைக்கு வெளியே அழைத்துச் செல்லப்பட அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் ரி.ஐ.டி. தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைவிட இந்த விவகாரத்தில் இதுவரை 5 முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் அனுராதபுரம் சிரைச்சாலையில் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் அவர்களிடம் சிறைச்சாலைக்கு சென்று புதிதாக விசாரணை செய்து வாக்கு மூலம் பதிவு செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுமந்திரன் எம்.பியை. கிளைமோர் குண்டு வைத்து கொலை செய்ய திட்டமிட்டனர் எனக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்களான காரலசிங்கம் குலேந்திரன், வேலாயுதம் விஜே குமார், முருகையா தவதேவன்,  மரியநாயகம் லுவிஸ் அஜந்தன், மதன் எனப்படும் சந்திரசேகரலிங்கம் வாசுதேவன்  ஆகியோரே கைது செய்யப்ப்ட்டுள்ளனர். இவர்கள் மீது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கொலை செய்ய திட்டம் தீட்டியமை மற்றும் போதைப் பொருள் வர்த்தகம் ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

கடந்த 2016 டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி வவுனியாவில் உள்ள பயங்கரவாத புலனயவுப் பிரிவு அலுவலகத்துக்கு சென்றுள்ள முன்னாள் புலிகள் இயக்க போராளி ஒருவர் சுமந்திரன் எம்.பி.யை கொலை செய்ய ' மாஸ்டர்' என அறியப்படும் புலிகள் இயக்க உருப்பினர் ஒருவர் தன்னிடம் விலை பேசியதையும் அது தொடர்பில் 15 இலட்சம் ரூபா ஒப்பந்தம் பேசப்பட்ட விடயத்தையும் கூறியுள்ளார். இதனையடுத்து  இந்த விடயமானது ப்யங்கரவாத புலனயவுப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா உள்ளிட்டோருக்கு அறிவிக்கப்ப்ட்டு அவர்களின் ஆலோசனைக்கு அமைய மேலதிக  நடவடிக்கைகள் பயங்கரவாத புலனயவுப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் நவாஸின் ஆலோசனைக்கு அமைய வவுனியா பயங்கரவாத புலனயவுப் பிரிவு அலுவலகம் ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

இந் நிலையில் சுமந்திரன் எம்.பி.க்கு உள்ள கொலை அச்சுறுத்தல் தொடர்பில் உடனடியாகவே பொலிசார் அவரை தெளிவு படுத்திய நிலையில் அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி நிக்ழ்வொன்றுக்காக யாழ். செல்வதும் தடுக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் தகவல் வழங்கிய  முன்னாள் போராளியை பின் தொடர்ந்து தகவல் சேகரித்த பொலிசார் கடந்த ஜனவரி 12, 13 ஆம் திகதிகளில் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

அதன்படி பயங்கரவாத புலனயவுப் பிரிவு தலைமையகத்தின் ஆலோசனையின் கீழ் செயற்பட்ட மூவர் கொண்ட சிறப்பு பொலிஸ் குழு கடந்த ஜனவரி  14 ஆம் திகதி இரவு கிளினொச்சி திருவாயூர் பகுதியின் வில்சன் ஸ்ட்ரீட்டில் வைத்து 32 வயதுடைய முன்னாள் போராளியான முருகையா தவவேதனை கைதுச் செய்துள்ளனர்.

 இதனிஅயடுத்து ஜனவரி 16 ஆம் திகதி கிளினொச்சியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் வைத்து முன்னாள் போராளியான 37 வயதுடைய கரலசிங்கம் குலேந்திரன் என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  இவரே மாஸ்டர் எனும் பெயரில்இ தகவல் வழங்கிய முன்னாள் போராளியுடன் தொடர்புபட்டவர் என்பதைக் கண்டறிந்த பொலிசார் கைதான இருவரையும் வவுனியா பயங்கரவாத புலனயவுப் பணியகத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்தனர்.

 இதனையுஅடுத்து விசாரணையில் தெரியவந்த தகவல்களுக்கு அமைவாக மாஸ்டர் என்பவரின் உறவுக்காரர் ஒருவரின் கிளினொச்சி இ ஊற்றுப்புலம் பகுதியில் உள்ள வீடொன்ரை பொலிசார் சுற்றிவலைத்துள்ளனர். இதன் போதே அங்கிருந்து இரு சக்தி வாய்ந்த கிளைமோர் குண்டுகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து மேலதிக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் போதே  திருகோணமலையில் உள்ள தனது வீட்டில் வைத்து மதன் எனப்படும்  சந்திரசேகரலிங்கம் வாசுதேவன் எனும் முன்னாள் புலி உறுப்பினரும் மருதங்கேணி கிழக்கில் உள்ள தனது வீட்டில் வைத்து மரியநாடகம் லெவிஸ் அஜந்தன் ஆகியோரை பொலிஸார் கைது செய்தனர்.  இவர்களைக் கைது செய்யும் போது அவர்களிடம் முறையே 2 மற்றும் 8 கிலோ கஞ்சா போதைப் பொருளினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

 இந் நிலையில் சந்தேக நபர்களிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்ப்ட்ட நிலையில் அவர்கள் கடந்த 20 ஆம் திகதி கிளினொச்சி நீதிவான் ஏ.ஏ. ஆனந்த ராஜா முன்னிலையில் ஆஜர்ச் எய்யப்ப்ட்டு விளக்கமறியலில் வைக்கப்ப்ட்டுள்ளனர். குரித்த நால்வரும் தற் சமயம்  அனுராதபுரம் சிரையில் தடுத்து வைக்கப்ப்ட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்தன. இதன் போதே மன்னாரில் வைத்து வேலாயுதம் விஜே குமார் எனும் சந்தேக நபர் கைது செய்யப்ப்ட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.