(எம்.மனோசித்ரா)
திருகோணமலை நகர அபிவிருத்தி உட்பட கிழக்கு மாகாணத்தின் விவசாய நவீனமயமாக்கல் மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காக 10 ஆண்டுகளுக்குள் பரந்து பட்ட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மகாவலி வேலைத்திட்டத்தில் விடுபட்ட மகாவலி ஏ மற்றும் பீ வலயங்களையும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதன் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு செங்கலடி மத்திய வித்தியாலயத்தின் 149 ஆவது ஆண்டு விழாவில் ஞாயிற்றுக்கிழமை (8) கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்த ஜனாதிபதி அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில் ,
இன்று ஞாயிற்றுக்கிழமை (08) மட்டக்களப்பு மாவட்டம் அபிவிருத்தியடைந்துள்ளது. எனினும் பொருளாதாரம் இன்னும் பலமடையவில்லை. அடுத்த 10 ஆண்டு திட்டமிடலுக்குள் மட்டக்களப்பு மாவட்டத்தை பொருளாதார ரீதியில் பலமடையச் செய்ய எதிர்பார்க்கின்றேன்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன மகாவலி திட்டத்தின் ஊடாக இந்த பிரதேசத்தை அபிவிருத்தியடைச் செய்வதற்கு திட்டமிட்டிருந்தார். எவ்வாறிருப்பினும் யுத்தத்தினால் அதனை செய்ய முடியாமல் போனது. தற்போது இந்தியாவுடன் இணைந்து திருகோணமலை மாவட்டத்தை மாநகரமாக அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க பியகமவில் 400 ஏக்கர் முதலீட்டு வலயம் காணப்படுகிறது. எனினும் திருகோணமலையில் 1000 ஏக்கர் முதலீட்டு வலயத்தை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. திருகோணமலை துறைமுகத்தை படிப்படியாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்டத்தை சிங்கப்பூர் நிறுவனமொன்று தயாரித்துள்ளது. அதனை முன்கொண்டு செல்வதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்.
இதன் மூலம் திருகோணமலை பாரிய நகரமாக அபிவிருத்தியடைந்துவிடும். அதே போன்று பொருளாதார ரீதியிலும் பலமான பொருளாதார மையமாக உருவாகிவிடும். அதே போன்று மறுபுறத்தில் விவசாயத்தையும் மேம்படுத்த வேண்டும்.
மகாவலி திட்டத்தில் விடுபட்ட ஏ மற்றும் பி வலயங்களை அபிவிருத்தி செய்து அதன் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தையும் அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதே போன்று இந்த பிரதேசத்தில் நவீன விவசாயத்தை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம்.
இந்த மாகாணம் இப்போது அரிசியில் தன்னிறைவு பெற்றுள்ளது. எனவே மேலும் புதிய பயிர்களை அறிமுகப்படுத்தப்படுத்த வேண்டும். கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்காக நிலாவெளி முதல் பனாமா வரையிலான சுற்றுலா வலயமொன்றை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. காடு மற்றும் ஏரி பகுதிகளில் சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் 10 வருடங்களில் திருகோணமலை நகரின் அபிவிருத்தி, மகாவலி ஏ மற்றும் பி பிரிவுகளின் அபிவிருத்தி, விவசாய நவீனமயமாக்கல், சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் இந்த மாகாணங்களில் புதிய பொருளாதாரம் உருவாக்கப்படும். தற்போதைய பிரச்சினையான பால் பண்ணையாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM