கொழும்பு புறக்கோட்டை பகுதியில் காணப்படும் மிதக்கும் சந்தையில் அண்மைக்காலமாக விபசாரங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தையை பராமரிக்கும் சில குழுவினர் இந்த விபசார நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக பகல் வேளைகளில் காதலர்கள் உல்லாசமாக இருப்பதற்கு குறித்த சந்தைகளில் இடம் வழங்கப்படுவதோடு இரவு நேரங்களில் விலை மாதர்கள் குறித்த இடங்களை விபசாரத்திற்காக பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பகல் வேளைகளில் மிதக்கும் சந்தைக்கு செல்லும் இளம் காதல் ஜோடிகளிடம் ஒரு மணித் தியாலத்துக்கு 100 ரூபா அறவிடப்படுகின்றது. ஒரு மணித்தியாலத்துக்கு மேற்பட்ட  ஒவ்வொரு மணித் தியாலத்துக்கும் 50 ரூபா மேலதிகமாக அறவிடப்படுகின்றது.

இரவு 10 மணிக்கு பிறகு விலை மாதர்களாக அழைத்து வரும் நபர்களிடம் 1000 ரூபா அறவிடப்படுகின்றது.