பலத்த மழை காரணமாக 7 பேர் உயிரிழப்பு : 23 பேர் காயம், 54,440 பேர் பாதிப்பு!

Published By: Vishnu

08 Oct, 2023 | 10:19 AM
image

கடும் மழை காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்த நிலையில் 13,352 குடும்பங்களைச் சேர்ந்த 54,440 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் 17 பிரதேச செயலகப் பிரிவுகளில் 273 குடும்பங்களைச் சேர்ந்த 1, 041 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கேகாலை மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளில் 278 குடும்பங்களைச் சேர்ந்த 1,058 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு மாவட்டத்தின் மூன்று  செயலகப் பிரிவுகளில் 70 குடும்பங்களைச் சேர்ந்த 293 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அந்த மாவட்டத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 17 பேர் காயமடைந்துள்ளனர்.

களுத்துறை மாவட்டத்தின் 13 பிரதேச செயலகப் பிரிவுகளில் 865 குடும்பங்களில் 3203 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கம்பஹா மாவட்டத்தில் 12 பிரதேச செயலகப் பிரிவுகளில் 134 குடும்பங்களில் 593 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாத்தறை மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளில் 2, 114 குடும்பங்களைச் சேர்ந்த 8, 597 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.

காலி மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 25 பேரும், புத்தளம் மாவட்டத்தின் இரண்டு பிரலே பிரிவுகளில் 52 குடும்பங்களைச் சேர்ந்த 193 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 54 குடும்பங்களைச் சேர்ந்த 204 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-03-18 06:13:34
news-image

'பூஜா பூமி' அபிவிருத்தி திட்டத்தின் கீழ்...

2025-03-18 04:13:02
news-image

காவியுடை அணிய தகுதியில்லாத ஒருசிலர் வடக்கில்...

2025-03-18 04:01:35
news-image

தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்

2025-03-18 03:53:38
news-image

முறையாக நடந்துகொள்ள தெரியாத ஒருவருக்கு நாங்கள்...

2025-03-18 03:48:50
news-image

8 வயதுக்குட்பட்ட அனைவரும் சிறுவர்கள் அவர்களுக்கு...

2025-03-18 02:50:14
news-image

அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை புறக்கணிப்பது...

2025-03-18 02:44:35
news-image

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய புதிய...

2025-03-18 02:36:35
news-image

சுவஸ்திகா அருள்லிங்கம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்...

2025-03-17 15:27:32
news-image

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம்...

2025-03-17 22:16:32
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான...

2025-03-17 22:07:08
news-image

மகர சிறைச்சாலையில் மூடப்பட்டுள்ள பள்ளிவாசலை ,...

2025-03-17 22:10:24