தொழில் நிமிர்த்தம் பிரிந்திருந்த நாம் மொபிடெலால் ஒன்றிணையவுள்ளோம் - காஸ் பொனன்ஸா அதிர்ஷ்டசாலியான விஜித் ரொட்றிக்கோ

Published By: Priyatharshan

27 Feb, 2017 | 10:57 AM
image

எனது வாழ்க்கையே மொபிடெல் தான். உண்மையில் சொல்லப்போனால் என் வாழ்க்கையை முற்றுமுழுதாக மாற்றிவிட்டது. நாம் 5 பேரும் மொபிடெலால் ஒன்றிணையவுள்ளோம். சந்தோஷத்தை என்னால் விபரிக்க முடியாதென மொபிடெல் காஸ் பொனன்ஸா அதிர்ஷ்டசாலியான வெலிவிட்டகே விஜித் ரொட்ரிக்கோ ஆனந்தக் கண்ணீருடன் தெரிவித்தார்.

இதேவேளை, மொபிடெல் நிறுவனம் என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான மக்களுக்கு இவ்வாறான உதவிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மொபிடெல் நிறுவனம் மாதாந்தம் முன்னெடுக்கும் காஸ் பொனன்ஸா எனும் திட்டத்தின் கீழ் 3 கோடி ரூபா பெறுமதியான மொன்டிரோ வகை ஜீப் ரக வாகனத்தை வென்ற அதிர்ஷ்டசாலியான களுத்துறை பயாகலயைச் சேர்ந்த வெலிவிட்டகே விஜித் ரொட்றிக்கோவை சந்திக்கும் வாய்ப்பு எமது வீரகேசரி இணைத்திற்கு கிடைத்ததது.

இந்நிலையிலேயே அவர்  தனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் குறித்து மேற்கண்டவாறு பகிர்ந்து கொண்டார். அவர் மேலும் எம்முடன் பகிர்ந்து கொள்கையில், 

எனது பெயர் வெலிவிட்டகே விஜித் ரொட்றிக்கோ, நான் பயாகலயில் வசித்து வருகின்றேன். அம்மா, அப்பா மற்றும் அக்கா இறந்துவிட்டனர். இன்னும் இரு அக்காமாரும் அண்ணன் ஒருவரும் என்னுடன் இருக்கின்றனர். நான் தான் எமது குடும்பத்தில் இளையவன்.

15 வருடமாக பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்துள்ளேன். அருகிலுள்ள வங்கியொன்றில் தற்போது கடமையாற்றி வருகின்றேன். பாதுகாப்பு உத்தியோகத்தராக வேலை செல்வதற்கு முன்னர் சிறு சிறு வேலைகள் செய்தேன்.  46 வயதாகின்றது. எனக்கு 3 பிள்ளைகள். மூத்த மகன் தொழிலுக்கு செல்கின்றார். 2 ஆவது மகன் உயர்தரத்தில் கல்விகற்கின்றார். 3 ஆவது மகள் பாடசாலைக்கு செல்கின்றார்.

வீடு கட்டுவதற்கும், நாளாந்த வாழ்க்கையை கொண்டு செல்வதற்கும் மற்றும் பிள்ளைகளை வளர்ப்பதற்கும் மிகவும் கஷ்டத்தை எதிர்நோக்கினோம். இதனால் எனது மனைவி வெளிநாடு சென்று வேலை செய்து சம்பாதிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். வருமானம் போதாமையால் எனது மனைவி 3 தடவை மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று சம்பாதித்து வந்துள்ளார். இம் முறையும் சம்பாதிப்பதற்காக வெளிநாடு சென்றுள்ளார். நான் தான் பிள்ளைகளை பராமரிப்பேன். நான் வேலைக்கு சென்ற பின்னர் எனது மூத்த மகன் தான் வீட்டு வேலைகளை பார்த்துக்கொள்வார்.

இவ்வாறு வாழ்க்கைச் சக்கரம் உருண்டோடியது. எந்தவிதத்திலும் பிள்ளைகளை கைவிடாமல் அவர்களுக்கு தேவையான பராமரிப்புகளை செய்து வந்தேன்.

நான் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றிக்கொடிருக்கும் போதே எனக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைத்தது. பிற்பகல் 1.30 மணி இருக்கும் தொலைபேசி அழைப்பொன்று வந்தது. மொபிடெல் இலக்கத்தில் இருந்து குறித்த அழைப்பு வந்தது. நான் அதனை பெரிது படுத்தவில்லை. கடமையில்இருந்த காரணத்தினால்.

மறுபடியும் அழைப்பு வந்தது மற்றுமொரு இலக்கத்தை கொடுத்து   துமிந்த என்பவருடன் கதைக்குமாறு. அந்த இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பேசினேன். மொபிடெல் நிறுவனத்தில் இருந்து பேசுகின்றோம். காஸ் பொனன்ஸா மூலம் உங்களுக்கு சிறிய பரிசொன்று கிடைக்கப்பெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டது.  

அதன் பின்னர் ஓரளவு நம்பிக்கை பிறந்தது. எதோ ஒருவகை சந்தோஷம் ஆட்கொண்ட நிலையில் நெஞ்சு படபடக்க அருகிலிருந்த கதிரையில் அமர்ந்தேன். வங்கியில் இருந்த ஊழியர்கள் எனக்கு நீர் கொடுத்தனர்.

உடனடியாக எனது அண்ணனுக்கு தொடர்பை ஏற்படுத்தி சம்பவம் தொடர்பில் தெரிவித்தேன். அவர் என்னை சமாதானப் படுத்துவதற்காக இவ்வாறு போலி அழைப்புக்கள் மேற்கொண்டு சிலர் குழப்புவார்கள் நீ ஜாக்கிரதையாக இருக்குமாறு தெரிவித்தார்.

இதன் பின்னர் நான் எனது மனைவிக்கு அழைப்பு எடுத்தேன் . எமது கஷ்ட காலத்திற்கு முடிவு வந்துவிட்டதென தெரிவித்தேன். அவர் உடனே அழத் தொடங்கினார்.

மறுநாள் நான் மொபிட்டெல் நிறுவனத்தின் தலைமைக்காரியாலயத்திற்கு தனியாச் சென்று விபரத்தை சொல்லி அதிகாரியுடன் பேசினேன். அப்போது தான் எனக்கு கிடைத்த பரிசு மென்டிரோ என தெரிந்தது. உடனே அதிர்ச்சியடைந்தேன். அந்தநிலையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

இவ்வாறு எனக்கு கிடைத்த வாகனத்தை பராமரிப்பதென்பது உண்மையில் என்னால் இயலாத காரியம் என்பதை உணர்ந்து அதை ஒரு வாகன விற்பனை நிலையத்திற்கு கொடுத்து விட்டு அதன்பெறுமதிக்கான பணத்தை பெற்றுக்கொண்டு, எனது குடும்பத் தேவைகளை பூர்த்திசெய்ய எண்ணினேன்.

ஆரம்பத்திலிருந்து இன்று வரைக்கும் மொபிடெல் தான் எனது உயிர். அதையே நான் கடந்த 10 வருடங்களாக பாவித்து வருகின்றேன். கூடுதலாக நான் எனது மனைவியுடனேயே மொபிடெல் மூலும் உரையாடுவேன். குறிப்பாக ஒருநாளைக்கு 2 அல்லது 3 வேளை அவருடன் தொலைபேசியில் உரையாடுவேன். சாதாரணமாக 400 ரூபாவுக்கு மீள் நிரப்பி அவரை சந்தோசப்படுத்துவதற்காக மொபிடெல் மூலம் உரையாடுவேன்.

ஒரே ஒரு சிம் தான் என்னிடம் உள்ளது அது மொபிடெல் மட்டும் தான். ஆரம்பத்திலிருந்தே மொபிடெலில் ஒரு பிரியம் இருந்தது. நல்ல சிக்னல் இருந்தது. நான்றாக தடங்கல் இல்லாது நீண்ட நேரம் உரையாட முடியும். இதனால் வேறு எந்த சிம் அட்டைகளுக்கும் அசைப்படவில்லை. இது தான் உண்மை.

இவ்வாறு வாகனத்தை கொடுத்து எடுத்த பணத்தை வைத்து எனது வாழ்க்கை கனவில் பலவற்றை சாதித்து விட்டேன். குடும்ப ஏழ்மையின் நிமித்தம் குடும்பத்தின் அன்புப் பிணைப்பை விட்டு அரபுநாட்டுக்கு வேலைக்காகச் சென்றுள்ள என் மனைவியையும் இந்த மொபிட்டெல் காஸ் பொனன்ஸா இணைத்து விட்டது.

மனைவி வீட்டுக்கு வரும் போது வீடே இல்லாமல் இருந்த எமக்கு வீடு, வாகனங்கள் மற்றும் எனது பிள்ளைகளின் வாழ்க்கையை பார்ந்து நிச்சயம் அதிர்ச்சியடைவாள். இத்துடன் எனது மனைவியின் வெளிநாட்டு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி கிடைத்துவிட்டது. பிள்ளைகளுடனும் என்னுடனும் அவர் அன்பாக வாழும் காலம் இந்த மொபிடெல் மூலம் கிடைத்துள்ளது. நிச்சயமாக மனைவி இவ்விடத்திற்கு வந்ததும் இடத்தைப் பார்த்து அழுவார். கடவுள் தான் இவ்வாறானதொரு அதிர்ஷ்டத்தை எனக்குத் தந்துள்ளார். எனது எத்தனையோ வருடக் கனவுகள் அனைத்தும் நனவாகியுள்ளது.

மத்திய கிழக்கு நாடென்றில் தொழில் புரியும் எனது மனைவியை திருப்பி அழைத்துள்ளேன். அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் முடிந்து விட்டன. எதிர்வரும் வாரமளவில் இங்கு வந்துவிடுவார். என்னிடம் அனைத்து தேவவைகளும் இருந்திருந்தால் எனக்கு கிடைந்த அதிர்ஷ்ட வாகனமான மொன்டிரோவை கொடுத்து பணத்தை பெற்றிருக்க மாட்டேன்.

என்னாலும் அதை பராமரிக்க முடியாது. அதனால் தான் அதனைக் கொடுத்து எனது குடும்பத்திற்கு தேவையான அனைத்து தேவைகளையும் பூர்த்திசெய்தேன். பிள்ளைகளின் எதிர்கால தேவைகளை மொபிடெல் இருந்ததால் பூர்த்தி செய்யக்கூடியதாக இருந்தது.

மெபிடெல் மூலம் நான் எனது மூத்த மகனுக்கு 10 பேர்ச் காணி வாங்கி கொடுத்துள்ளேன். முச்சக்கர வண்டியொன்றையும் வாங்கிக் கொடுத்துள்ளேன். இப் போது நான் வாழ்ந்து கொண்டிருக்கும் வீட்டையும் முற்றுமுழுதாக பூர்த்திசெய்துள்ளேன். நானும் ஒரு சிறிய வேன் ஒன்றையும் வாங்கியுள்ளேன். எதிர்காலத்தில் பாடசாலைக்கு பிள்ளைகளை ஏற்றிச்செல்ல முடியும். பெரிய பெரிய வேலைகளை முடித்து விட்டேன். மிகுதிப் பணத்தை வங்கியில் வைப்பிலிட்டுள்ளேன். மனைவி வந்தவுடன் மிகுதி வேலைகளை செய்யலாம் என்று நினைக்கின்றேன்.

செப்டெம்பர் மாதம் 3 திகதி குளியாபிட்டியில் இடம்பெற்ற வைபவத்தில் அனைவர் முன்னிலையிலும் எனக்கு குறித்த காஸ் பொனன்ஸா மூலம் கிடைத்த வாகனத்திற்கான திறவுகோல் வழங்கப்பட்டது. அந்ந நிகழ்வை என் வாழ் நாளில் மறக்க முடியாது. சந்தோஷத்தை விபரிக்க முடியாது. எனது வாழ்க்கையே மொபிடெல் தான்.

நான் மொபிடெல் நீசார்ச் காட்  வாங்கும் கடையில் வாரத்திற்கு 3 ஆயிரம் ரூபா தான் விற்பனையாகும் இப்போது 5 ஆயிரம் ரூபா வரை அதிகரித்துள்ளது.

தலையில் இருந்து பெரியபாரமொன்றை இறக்கிவைத்தது போல் உள்ளது. வாழ்க்கையில் நீண்ட காலத்திற்கு நிறைவேற்ற வேண்டிய தேவைகள் ஒரு நொடியிலேயே செய்து முடிக்கப்பட்டுள்ளன. காரணம் மொபிடெல் தான். முற்றுமுழுதாக என் வாழ்க்கையில் நல்லதொரு திருப்பு முனையாக அமைந்துள்ளது.

மொபிடெல் நிறுவனம் நீண்ட காலம் நிலைத்திருந்து தனது சேவையை வழங்க வேண்டும். இன்னும் என்னைப்போன்ற பலருக்கு இவ்வாறான உதவிகளை வழங்க வேண்டும். அங்கு கடமைபுரியும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு தைரியத்தையும், சக்தியை வழங்க இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

( வீ.பிரியதர்சன் )

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செயற்கை நுண்ணறிவுடன் இலங்கையில் அறிமுகமான கையடக்க...

2025-02-13 15:57:06
news-image

கருப்பு பணம் தூய்மைப்படுத்தலுக்கு எதிரான செயலணி...

2025-02-13 13:03:25
news-image

சியெட் இலங்கையில் 10வது முதற்தர S-I-S...

2025-02-12 16:03:43
news-image

தேசிய மனநல நிறுவகத்தின் வாழ்வை பிரகாசமாக்குகின்ற...

2025-02-12 12:46:29
news-image

Acuity Partners ஐ முழுமையாக கையகப்படுத்தி,...

2025-02-12 12:33:05
news-image

எயிற்கின் ஸ்பென்ஸ் அதன் புதிய தவிசாளராக...

2025-02-11 18:03:15
news-image

MMBL மணி ட்ரான்ஸ்பர் பிரத்தியேக கிளையுடன்...

2025-02-11 17:50:42
news-image

இலங்கையின் பொருளாதாரத்தை புத்துயிர் பெறச்செய்தல்: வளர்ச்சியை...

2025-02-09 15:23:19
news-image

SLIM National Sales Awards 2024...

2025-02-08 18:18:45
news-image

யூனியன் அஷ்யூரன்ஸ் பாங்கசூரன்ஸ் MDRT தகைமையாளர்களுக்கான...

2025-02-08 18:18:18
news-image

முன்பள்ளி கல்வியை மேம்படுத்த UNICEFஉடன் இணையும்...

2025-02-06 10:13:01
news-image

விலை உறுதிப்பாடு : தவிர்க்க முடியாததொன்றா?

2025-02-05 18:33:08