கொழும்பு கறுவாத்தோட்டம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சாரதி எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கொழும்பு இலக்கம் 07 இல் உள்ள நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கடவந்தொட்டாவை சுதந்திர சுற்றுவட்டம் அருகே நேற்று வியாழக்கிழமை (05) மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று வெள்ளிக்கிழமை (06) அதிகாலை உயிரிழந்திருந்தார்.
பொலிஸ் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் குறித்த உத்தியோகத்தர் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில் காரில் மோதி விபத்துக்குள்ளாகி இருந்தார்.
இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி கைதுசெய்யப்பட்டிருந்ததோடு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியியலாளராக கடமையாற்றும் 27 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM