(எம்.எப்.எம்.பஸீர்)

Image result for புலனாய்வுப் பிரிவின் விசாரணைக் குழு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, 5 மாணவர் கடத்தல் உள்ளிட்ட வெள்ளை வேன் கடத்தல்கள், வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரம், லசந்த விக்ரமதுங்க படுகொலை விவகாரம் உள்ளிட்ட பிரபல விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைக் குழுக்களை வழி நடத்தும் சிறப்பு விசாரணையாளரான சானி அபேசேகர சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக (எஸ்.எஸ்.பி.) பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

கடந்த 2016 ஆகஸ்ட் 25 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரொஇயந்த ஜயகொடி தெரிவித்தார்.