பொருளாதார பாதிப்பினால் மூளைசாலிகள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - சியம்பலாபிட்டிய

06 Oct, 2023 | 02:26 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

பொருளாதார பாதிப்பினால் மூளைசாலிகள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என்று குறிப்பிடுவதை ஏற்க முடியாது.

கடந்த அரசாங்கம் எடுத்த தவறான தீர்மானங்களை திருத்திக்கொண்டுள்ளோம். மூளைசாலிகள் வெளியேற்றத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்ற  மூளைசாலிகள் வெளியேற்றம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

கடந்த அரசாங்கம் எடுத்த தவறான தீர்மானங்களினால் பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்தது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். பொருளாதார பாதிப்பின் காரணமாகவே பெரும்பாலான மூளைசாலிகள் அப்போது  நாட்டை விட்டு வெளியேறினார்கள்.

பொருளாதாரத்தில் அமுல்படுத்தப்பட்ட தவறான தீர்மானங்களை தற்போது திருத்திக் கொண்டுள்ளோம்.

பொருளாதார பாதிப்பின் காரணமாகவே தற்போதும் மூளைசாலிகள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தொழிற்றுறையினர் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

படித்த இளைஞர் யுவதிகள் தொழில் பயிற்சிகளை பெற்று நாட்டை விட்டு தொழில்வாய்புகளுக்காக வெளியேறுகிறார்கள்.

இதனை பாதகமான அம்சம் என்று கருத முடியாது. தேசிய தொழிற்றுறையை பாதுகாக்க அமைச்சு சார் மட்டத்தில் பல புதிய கொள்கை திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

வரிக் கொள்கையை திருத்தியமைக்க விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பணவீக்கம் மற்றும் உணவல்லாத பணவீக்கம் சடுதியாக குறைவடைந்துள்ளன.

இந்த ஆண்டின் இறுதி பகுதிக்குள் வங்கி  வட்டி வீதங்கள் குறைக்கப்படும். நெருக்கடியான நிலையில் இருந்து கட்டம் கட்டமாக மீட்சியடைந்து வருகிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயணிகளிடம் அதிக வரவேற்பு உள்ளதால் நாகை...

2024-11-03 09:22:20
news-image

ஜே.வி.பிக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி தேர்தல் விஞ்ஞாபனம்...

2024-11-03 08:53:11
news-image

அடுத்த 10 வருடங்களில் குடும்பமொன்று கார்...

2024-11-03 08:29:55
news-image

தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞானபத்தில் திருத்தம்

2024-11-03 08:24:23
news-image

கன்னி வரவு - செலவு திட்டத்தை...

2024-11-03 08:14:16
news-image

இன்றைய வானிலை 

2024-11-03 06:22:50
news-image

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விசேட விநியோகம்...

2024-11-02 18:29:51
news-image

யாழில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி கோடிக்கணக்கான...

2024-11-02 18:39:36
news-image

இல்லாத ஒன்றுக்கு கனவு காண்பதை விட...

2024-11-02 18:36:33
news-image

இவ்வருடத்தில் வீதி விபத்துக்களால் 1,898 பேர்...

2024-11-02 18:31:13
news-image

பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கும் ஜேர்மன் தூதுவர்...

2024-11-02 18:35:49
news-image

கேகாலையில் கேரள கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்...

2024-11-02 18:07:18