உலகக் கிண்ணம் : பாகிஸ்தான் - நெதர்லாந்து மோதல் இன்று

Published By: Sethu

06 Oct, 2023 | 09:10 AM
image

(ஆர்.சேதுராமன்)

2023 ஆண்கள் உலகக் கிண்ணக் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாது நாளான இன்று பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகள் மோதவுள்ளன. ஹைதராபாத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இவ்விரு அணிகளும் 2 உலகக் கிண்ணப் போட்டிகள் உட்பட 6 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் மோதியுள்ளன. அவை அனைத்திலும் பாகிஸ்தான் அணியே வெற்றியீட்டியது.

1992 ஆம் ஆண்டு உலகக் கிண்ண சம்பியனான அணி பாகிஸ்தான், இம்முறையும், பாபர் அஸாம் தலைமையில் பலமான பாகிஸ்தான் அணி, பலமான அணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

7 வருடங்களின் பின் இன்று இந்திய மண்ணில் முதல் தடவையாக உத்தியோகபூர்வ போட்டியொன்றில்  பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது. அவ்வணி இறுதியாக இந்தியாவில் 2016 ஆம் ஆண்டு இருபது20 உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடியிருந்தது.

அதேவேளை, 2011 ஆம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக, ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு நெதர்லாந்து தகுதி பெற்றுள்ளது.

ஸ்கொட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி, இவ்வருட உலகக் கிண்ணப் போட்டிகளுக்குத் தெரிவான ஒரேயொரு ஐ.சி.சி. இணை அங்கத்துவ நாட்டின் அணியாகவுள்ளது.

ஸிம்பாப்வேயில் நடைபெற்ற உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் இரண்டாமிடம் பெற்றதன் மூலம், மேற்கிந்தியத் தீவுகள், ஸிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய டெஸ்ட் அந்தஸ்துடைய அணிகளை மீறி, உலகக் கிண்ணப்போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்பை நெதர்லாந்து பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈவா வலைபந்தாட்டத்தில் விமானப்படைக்கு 2 சம்பியன்...

2025-01-17 21:24:06
news-image

ITF ஆசியா அபிவிருத்தி சம்பியன்ஷிப்: சிறுமிகள்...

2025-01-17 20:50:01
news-image

இளம் பெட்மின்டன் வீரர்களுக்கு பண்டாரவளை சென்...

2025-01-17 17:29:38
news-image

எம்சிஏ டி பிரிவு 40 ஓவர்...

2025-01-16 20:03:33
news-image

ஐசிசி 19இன் கீழ் மகளிர் ரி20...

2025-01-16 18:13:11
news-image

மகளிர் சர்வதேச ஒருநாள்  கிரிக்கெட்: ப்ரத்திகா,...

2025-01-15 18:24:23
news-image

றினோன் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தின் 'கால்பந்தாட்டம் மூலம்...

2025-01-14 19:24:40
news-image

டிசம்பர் மாதத்தின் அதிசிறந்த ஐசிசி வீரர்...

2025-01-14 18:34:07
news-image

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா...

2025-01-14 17:02:04
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பெத்தும்...

2025-01-14 14:24:06
news-image

வட மாகாணத்தில் மேசைப்பந்தாட்டப் பயிற்சித் திட்டம்

2025-01-14 14:11:23
news-image

19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக்...

2025-01-13 22:15:59