(எம்.ஆர்.எம்.வசீம்)
சனல்4 வெளிப்படுத்தியுள்ள விடயங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை நிராகரிப்பதாக கூறி ஜனாதிபதி நாட்டுக்கு பெருமை சேர்க்கவில்லை.
மாறாக சர்வதேச ரீதியில் நாட்டுக்கு அபகீர்த்தியையே ஏற்படுத்தியுள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (5) நடைபெற்ற துறைமுக அதிகார சபை மற்றும் சிவில் விமான சேவைகள் தொடர்பான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
அண்மையில் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு நேர்காணல் வழங்கிய ஜனாதிபதி, எங்களை இரண்டாம் தர பிரஜைகளாக நினைக்கின்றீர்களா என்று கேட்டுள்ளார். அவர்கள் அப்படி நினைப்பதில் தவறில்லை. இங்கே இவ்வாறு நடந்தால் அப்படி நினைப்பார்கள்.
நீதிவான் நாட்டை விட்டு வெளியேறி செல்லும் போது அப்படி கேட்கலாம் தானே. நீங்கள் இவ்வாறு செய்வதால் நடக்கும் வேலையே இது.
பிரகீத் எக்னலிகொடவுக்கு எனன நடந்தது என்று அசாத் மௌலான கூறுவதாக தெரிவிக்கின்றார். ஆனால் நீங்கள் சர்வதேச விசாரணையை நிராகரிக்கின்றீர்கள். நீங்கள் அவ்வாறு கூறி நாட்டுக்கு பெருமையை கொண்டு வரவரவில்லை. அபகீர்த்தியையே கொண்டு வந்துள்ளீர்கள்.
வெளிவிவகார அமைச்சின் மகன்தானே அமைச்சருக்கு ஆலோசனை வழங்குகின்றார். அவர்தான் ஜனாதிபதிக்கு இந்த நேர்காணலுக்கு ஆலோசனை வழங்கினாரோ தெரியவில்லை. சிறுபிள்ளை தனமான பதிலையே அவர் வழங்கியுள்ளார்.
இதேவேளை, யாழ்- தமிழ்நாடு படகு சேவையை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அடிக்கடி கதைக்கப்படுகின்றது. ஆனால் அதற்கான தடைகள் எங்கே இருக்கின்றது என்பது தொடர்பில் தெரியவில்லை. இலங்கையில் வாழ முடியாமையினால் இந்தியாவுக்கு சென்ற இரண்டு இலட்சம் பேர் வரையிலானோர் அகதிகளாக இருக்கின்றனர். இவர்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு இங்கு வருவதற்கு உரிமை உள்ளது.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் விமான நிலையம் உள்ளது. யாரேனும் அமைச்சர் வரும் போது மட்டும் சுற்றுப் பயண விமானங்கள் நடக்கும். மாலைதீவு போன்று உள்ளக விமான சேவைகளுக்கு அதனை பயன்படுத்த முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM