முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் உள்ள தமது காணிகளையும் வீடுகளையும் இராணுவம் விடுவிக்க வேண்டுமெனக்கோரி தொடர்  போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் இன்று முதல் சுழற்சி முறையிலான அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

நேற்றையதினம் பிரதேசசெயலாளர் ம.பிரதீபனை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையிலேயே அவர்கள் இன்று முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகம் முன்னால் இடம்பெற்றுவரும் போராட்டம் இன்றையதினம் 12 ஆவது நாளை எட்டியுள்ளது.

புதுக்குடியிருப்பு நகரப் பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை வெளியேற்றுமாறு வலியுறுத்தி குறித்த போராட்டம் கடந்த 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.