தொடர்ச்சியாக பாதுகாப்பு பணியில் இருக்கும் பல அதிகாரிகளைக் கடித்து வந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் வளர்ப்பு நாய் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டது.
இரண்டு வயது ஜேர்மன் ஷெப்பர்ட் “கமாண்டர்” என்ற நாயை என்ன செய்வது என்பது பற்றி முடிவு எடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பைடனின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
புதன்கிழமை அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பைடனின் தகவல் தொடர்பு பணிப்பாளர் எலிசபெத் அலெக்சாண்டர், வெள்ளை மாளிகை பணியாளர்கள் மற்றும் அவர்களைப் பாதுகாக்கும் பாதுகாப்பு அதிகாரிகளின் பாதுகாப்பு குறித்து ஜனாதிபதியும் அவரது மனைவியும் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை (25) வெள்ளை மாளிகையில் இரகசிய சேவை அதிகாரியை கமாண்டர் கடித்திருக்கிறது. மருத்துவ பணியாளர்கள் உடனடியாக அந்த அதிகாரிக்குச் சிகிச்சை அளித்தனர்.
ஜோ பைடனின் வளர்ப்பு நாயான கமாண்டர் இது போல பணியில் இருக்கும் பாதுகாப்பு அதிகாரியைக் கடிப்பது முதல் முறையல்ல. தொடர்ச்சியாக பாதுகாப்பு பணியில் இருக்கும் 11 அதிகாரிகளைக் கடித்து இருக்கிறது.
வெள்ளை மாளிகையில் இருக்கும் ஜனாதிபதி, அவரின் குடும்பத்தினர் மற்றும் பிற அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபடுபவர்களே `இரகசிய சேவை அதிகாரிகள்' (Secret Service employee). இவர்கள் வெள்ளை மாளிகையின் பல இடங்களிலும் காவலுக்கு நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தான், `கமாண்டர்' ஓர் அதிகாரியைக் கடித்திருக்கிறது.
பைடனை பொறுத்தமட்டில் அவரின் வளர்ப்பு நாயை குடும்ப உறுப்பினராகவே கருதுகிறார்.
``செல்லப்பிராணிகளுக்கு மன அழுத்தமான சூழல் உள்ள இடமாக வெள்ளை மாளிகை உள்ளது. வளர்ப்பு நாயான கமாண்டர் 2022 அக்டோபர் முதல் ஜனவரிக்கு இடைப்பட்ட காலத்தில் 10 அதிகாரிகளைக் கடித்திருக்கிறது என தகவல் தொடர்பு பணிப்பாளரான எலிஸபெத் அலெக்சாண்டர் முன்னர் தெரிவித்திருந்தார்.
2021 இல் பைடனின் சகோதரர் ஜேம்ஸ், கமாண்டரை பைடனுக்கு பரிசாகக் கொடுத்தார்.
பைடனின் குடும்பத்தில் `வில்லோ' என்ற பூனையும் இருக்கிறது.
வெள்ளை மாளிகை ஊழியர்களைக் கடித்து ஆக்ரோஷமாக நடந்து கொள்ளும் பைடனின் இரண்டாவது வளர்ப்பு நாய் கமாண்டர். இதேபோன்று அதிகாரிகளைக் கடித்து ஆக்ரோஷமாக நடந்து கொண்ட `மேஜர்' என்ற ஜேர்மன் ஷெப்பர்ட் நாய் நண்பர்களுடன் டெலாவேரில் வாழ அனுப்பி வைக்கப்பட்டது.
பைடனின் பிரியமான சாம்ப் என்ற நாய் 2021 இல் 13 வயதில் இறந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM