இந்தியாவில் 110மில்லியன் மக்கள் 60 வயதைக் கடந்தவர்களாக இருக்கிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. அத்துடன் இவர்களுக்கு என பொதுவான ஆரோக்கியம் சார்ந்த மருத்துவ கொள்கை வகுப்பது கடினம் என்றும் எடுத்துரைக்கிறது அந்த ஆய்வு. ஆனால் 60 வயதைக் கடந்த அனைவருக்கும் பொருத்தமான வழிகாட்டுதலையும் அதில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
புகைபிடிக்கக்கூடாது. புகைபிடிக்கும் பழக்கம் இருந்தால் அதனை முற்றாக தவிர்க்கவேண்டும். தினமும் 30 நிமிடம் வரை தொடர்ச்சியாகவோ அல்லது விட்டுவிட்டோ உடற்பயிற்சி (நடைபயிற்சி, கை கால் அசைத்தல், காலார நடத்தல்), நடக்கும் போதோ அல்லது மாடிப்படி ஏறும்போதோ அல்லது மின்ஏணி அல்லது மின்சார படிக்கட்டு ஆகியவற்றை பயன்படுத்தும் போது கூடுதலான கவனம் மற்றும் போதிய பாதுகாப்பு கவசத்தை உடன் வைத்திருத்தல், மாதாமாதம் தொடர்ச்சியான மருத்துவ பரிசோதனை, இதயத்தைப் பாதிக்கும் வகையினதான உணவுவகைகளை தவிர்த்துவிட்டு? ஆரோக்கியமான உணவு பழக்கத்தைஏற்படுத்திக் கொள்ளல், பழங்கள் , காய்கறிகள், விற்றமின்கள் மற்றும் தேவையான ஊட்டச்சத்தினை மறவாமல் எடுத்துக் கொள்ளல், உறவுமேலாண்மையை சரிவர கையாண்டு மனதை இணக்கமான சூழலை வைத்திருத்தல், 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை உறங்கவேண்டும். மன அழுத்தம் மற்றும் மன உளைச்சலை கட்டுப்படுத்தும் காரணியாக திகழும் தியானம், யோகா போன்றவற்றை மேற்கொள்ளவேண்டும். பல், இதயம், பார்வை, நீரிழிவு, இரத்த அழுத்தம், சிறுநீரக செயல்பாடு ஆகியவற்றில் எப்போதும் கவனத்துடன் இருக்கவேண்டும்.
இத்தகையை விடயங்களை மனதில் இருத்தி இயங்கினால் முதுமை இனிக்கும்.
டொக்டர். அகர்வால்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM