களுபோவில பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உயிரிழப்பு

Published By: Digital Desk 3

05 Oct, 2023 | 12:30 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

கொஹூவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுபோவில பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்றுடன் கார் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒரு வயதுடைய குழந்தையொன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

கொஹுவலை,  களுபோவில வைத்தியசாலை வீதியில் கொஹுவலையில் இருந்து தெஹிவளை நோக்கி பயணித்த கார் ஒன்று எதிர் திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதி  இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, விபத்துக்குள்ளான  முச்சக்கரவண்டி முன்னோக்கி இழுத்துச் செல்லப்பட்டு அப்பகுதியில் உள்ள வீடொன்றின் நுழைவாயில் கதவில் மோதியுள்ளது. 

விபத்தில்  காயங்களுக்குள்ளான தாய் மற்றும் அவரது ஒரு வயது குழந்தை களுபோவில வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட நிலையில் பலத்த காயமடைந்த குழந்தை மேலதிக சிகிச்சைக்காக   கொழும்பு ரிஜ்வே சிறுவர்  வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது உயிரிழந்துள்ளது. 

தாய் தீவிர சிகிச்சைப் பிரிவில்  சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் முச்சக்கரவண்டியில் பயணித்த மற்றுமொரு பெண்ணும் சிறு காயங்களுடன் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

உயிரிழந்த குழந்தை நுகேகொடை பிரதேசத்தில் வசிக்கும் ஒரு வயதுடைய ஆண் குழந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கொஹூவலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துபாய் இரவு விடுதியில் மோதல்: 13...

2024-02-23 22:07:27
news-image

சீன நகரில் 100 வாகனங்கள் ஒன்றுடன்...

2024-02-23 21:44:19
news-image

குவைத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இலங்கையர்...

2024-02-23 20:58:08
news-image

கட்டுநாயக்கவில் கைதான யாழ்ப்பாணம், வவுனியாவைச் சேர்ந்த...

2024-02-23 19:53:21
news-image

வழக்குத் தொடுநர்களுடன் சமரசத்துக்காக மூவர் கொண்ட...

2024-02-23 19:40:36
news-image

தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில்...

2024-02-23 19:44:18
news-image

புளொட் இராகவனின் அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுப்பு

2024-02-23 18:31:37
news-image

புலம்பெயர் இலங்கையர்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவில்...

2024-02-23 18:12:51
news-image

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவுக்கு...

2024-02-23 18:18:03
news-image

யாழ். பல்கலை விஞ்ஞான பீட மாணவர்களின்...

2024-02-23 17:38:55
news-image

வட்டவளையில் தோட்டமொன்றில் புதைக்கப்பட்ட 6 மாத...

2024-02-23 18:30:28
news-image

மன்னார் - வங்காலையில் ஆசிரியரால் தாக்கப்பட்ட...

2024-02-23 17:29:20