நீடித்து உழைக்கும் நுகர்வோர் சாதனங்களைப் பொறுத்தவரையில் நாட்டில் முன்னிலையில் திகழும் ஒரு வர்த்தகநாமமான சிங்கர் தான் முன்னெடுத்திருந்த ஊக்குவிப்பு அதிர்ஷ்டக் குலுக்கல் மற்றும் ‘சிங்கர் Nawa Divi Thilina 2016’ ஊக்குவிப்பின் பரிசுகளை வழங்கும் நிகழ்வை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது.
10 அதிர்ஷ்டசாலி தம்பதிகளுக்கு அனைத்துச் செலவுகளும் அடங்கிய 3 நாள் சிங்கப்பூர் சுற்றுலா ஒன்றையும் மாபெரும் பரிசின் வெற்றியாளருக்கு ரூபா 1 மில்லியன் பரிசையும் சிங்கர் Nawa Divi Thilina என்ற தனது ஊக்குவிப்பின் மூலமாக சிங்கர் வழங்கியுள்ளது.
2016 மே முதல் ஜுலை வரையான காலப்பகுதியில் திருமண பந்தத்தில் இணைந்த தம்பதிகளுக்கு இந்த ஊக்குவிப்பில் பங்குபற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த அதிர்ஷ்டக் குலுக்கலுக்கு நாடெங்கிலுமிருந்து வியப்பூட்டும் வகையில் பெருந்தொகையான திருமண அழைப்பிதழ்கள் சிங்கருக்கு கிடைக்கப்பெற்றிருந்தன.
மாபெரும் அதிர்ஷ்ட குலுக்கலில் நுழைந்துகொள்ளும் தகைமையைப் பெற்றுக்கொள்வதற்காக 2016 ஜுலை 31 அன்று அல்லது அதற்கு முன்பதாக தமது திருமண அழைப்பிதழ்களை நாடெங்கிலும் உள்ள எந்தவொரு சிங்கர் பிளஸ் காட்சிறையிலும் சமர்ப்பிக்குமாறு புதிதாக திருமண பந்தத்தில் இணைந்த தம்பதிகள் கேட்கப்பட்டிருந்தனர்.
இந்த ஊக்குவிப்புக்கு மேலதிகமாக மே 1 ஆம் திகதியிலிருந்து ரூபா 3,000 அல்லது அதற்கு மேற்பட்ட பெறுமதிக்கு சிங்கர் உற்பத்திகளைக் கொள்வனவு செய்த புதுமண தம்பதிகளுக்கு, தாங்கள் கொள்வனவு செய்தமையை உறுதிப்படுத்தும் வகையில் ரசீதை அவர்களது திருமண அழைப்பிதழுடன் இணைத்து சமர்ப்பிக்குமாறு ஊக்குவிக்கப்பட்டனர்.
அவற்றை சிங்கர் காட்சியறைகளில் ஒப்படைப்பதன் மூலமாக ரூபா ஒரு மில்லியன் என்ற மாபெரும் பரிசுத்தொகையை வெல்லும் போட்டியில் நுழைவதற்கான தகைமையை அவர்கள் பெற்றிருந்தனர்.
தமது வாழ்வில் முக்கியமான தினத்திற்கு முகங்கொடுப்பதற்கு அவர்கள் தம்மை தயாராக்கிக் கொள்ள உதவியாக, தள்ளுபடிகள், வட்டியில்லா வாடகைக் கொடுப்பனவுத் திட்டங்கள் இணைந்த சலுகைகள் மற்றும் கடனட்டை சலுகைகள் போன்ற பல்வேறு சலுகைகளையும் சிங்கர் அவர்களுக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ரூபா ஒரு மில்லியன் என்ற மாபெரும் பரிசையும் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்று வருவதற்கான பரிசையும் அதிர்ஷ்டசாலி தம்பதிகளான சனுஜ மற்றும் தேஷா குமாரசிங்க ஆகியோர் வென்றுகொண்டனர். தமது வெற்றி தொடர்பில் இத்தம்பதிகள் கருத்து வெளியிடுகையில்,
“ஏனைய வெற்றியாளர்களுடன் இணைந்து சிங்கப்பூர் சுற்றுலாவை தாம் மிகவும் அனுபவித்து மகிழ்ந்துள்ளதாகவும் பலருக்கு அதுவே சிங்கப்பூருக்கான முதலாவது சுற்றுலாவாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டனர். தங்குமிடம்ரூபவ் உணவு மற்றும் பாதுகாப்பு அடங்கலாக தமக்குத் தேவையான அனைத்து சேவைகளையும் ஏற்பாடு செய்து, தமது சுற்றுலாவை இனிதாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் ஆக்குவதற்கு சுற்றுலா ஆரம்பம் முதல் அது நிறைவுபெறும் வரை சிங்கர் அணி வழங்கிய ஆதரவு மற்றும் வழிகாட்டல் ஆகியவற்றையும் அவர்கள் போற்றியுள்ளனர்”.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM