அம்பாறையில் மோட்டர் சைக்கிளை திருடிய 3 பேர் கைது : 4 மோட்டார் சைக்கிள் மீட்பு

Published By: Vishnu

05 Oct, 2023 | 03:42 PM
image

அம்பாறை நிந்தவூரில் வீடு ஒன்றின் முன்னால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிளை திருடிச் சென்ற 3 பேரை புதன்கிழமை (04) பொலிஸார் கைதுள்ளனர்.

இதையடுத்து செய்ததுடன் திருடப்பட்ட மோட்டார் சைக்கள் உட்பட 4 மோட்டார் சைக்கிள்களை வாகனம் திருத்தும் இடத்திலிருந்து மீட்டுள்ளதாக நிந்தவூர் பொலிசார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளை தொலைத்தவர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவந்தனர்.

இந்நிலையில் விசேட புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கு அமைவாக சம்பவதினமான புதன்கிழமை (04) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனை பகுதியில் மோட்டர்சைக்கிளை திருடிச் சென்ற 3 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

இதையடுத்து திருடப்பட்ட 4 மோட்டர்சைக்கிள்கள்  வாழைச்சேனையில் உள்ள வாகன திருத்துமிடமொன்றிலிருந்து பொலிஸார் மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் 22, 28, 27 வயதுடைய பிறைந்துறைச்சேனையைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை இன்று வியாழக்கிழமை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டப் பிரதேசங்களில் பொதுமக்கள் பாதுகாப்பு குழு...

2026-05-21 16:47:41
news-image

வடக்கு மாகாணத்தில் இந்த ஆண்டுக்கான சிறுபோக...

2026-05-21 16:52:26
news-image

பிரதமர் ஹரிணி அமரசூரிய லண்டனில் வசிக்கும்...

2026-05-21 16:51:04
news-image

சமர்க்களநாயகன் பிரிகேடியர் பால்ராஜிற்கு சபையில் அஞ்சலி...

2026-05-21 16:17:59
news-image

வெசாக் தானசாலைகளில் குளிர்பானங்களுக்குப் பதிலாக சூடான...

2026-05-21 16:14:47
news-image

வவுனியா பொது வைத்தியசாலையில் பன்முக மருத்துவக்...

2026-05-21 15:55:37
news-image

காஸா நோக்கிய மனிதாபிமான கப்பல் பேரணி:...

2026-05-21 16:40:19
news-image

கைத்தொலைபேசி தொலைந்தால் அல்லது திருடப்பட்டால் என்ன...

2026-05-21 15:52:10
news-image

பாலியல் துஷ்பிரயோக வழக்கு : வன்கொடுமைக்கு...

2026-05-21 15:44:28
news-image

எபொல்லா வைரஸ் தொற்று ; விமான...

2026-05-21 15:07:23
news-image

மட்டு.ஏறாவூரில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த பழமையான துப்பாக்கி,...

2026-05-21 15:02:19
news-image

ஸ்ரீபாத யாத்திரை பருவத்தின் போது இதுவரை...

2026-05-21 15:00:40