உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாறு - 1
(நெவில் அன்தனி)
ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி பொன் விழா காண இன்னும் இரண்டு வருடங்கள் உள்ள நிலையில் இந்தியாவில் வியாழக்கிழமை (05) ஆரம்பமாகும் 13ஆவது ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி முழு உலகையும் வெகுவாக ஈர்த்துள்ளது.
ஆடவர் உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பித்து 48 வருடங்கள் ஆகின்றபோதிலும் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஆரம்பித்து இவ் வருடத்துடன் 50 வருடங்கள் பூர்த்தி அடைந்துள்ளது.
இந் நிலையில் இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி கிரிக்கெட்டின் மகத்துவத்தை உலகுக்கு உணர்த்துவதுடன் நினைவிலிருந்து நீங்கா தருணங்களையும் வழங்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
நடப்பு உலக சம்பியன் இங்கிலாந்துக்கும் 2019இல் இரண்டாம் இடத்தைப் பெற்ற நியூஸிலாந்துக்கும் இடையில் அஹமதாபாத், நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (05) நடைபெறவுள்ள போட்டியுடன் 13ஆவது ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயம் ஆரம்பமாகிறது.
இந்த வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா, இலங்கை ஆகிய பத்து நாடுகள் பங்குபற்றுகின்றன.
இந் நிலையில் நடந்து முடிந்த 12 அத்தியாயங்களில் எந்தெந்த அணிகள் சம்பியனாகின என்பதை மீட்டுப் பார்ப்பது பொருத்தமாகும்.
அங்குரார்ப்பண உலகக் கிண்ணம் - 1975
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் உயரியதும் பிரதானதுமான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் அங்குரார்ப்பண அத்தியாயம் 1975ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்றது.
இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, கிழக்கு ஆபிரிக்கா (ஏ குழு), அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் (பி குழு) ஆகிய 8 நாடுகள் அங்குரார்ப்பண உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றின.
அக் காலப் பகுதியில் கிரிக்கெட் விளையாட்டில் பலசாலியும் ஜாம்பவானுமான மேற்கிந்தியத் தீவுகள் தோல்வி அடையாத அணியாக முதலாவது உலக சம்பியனானது.
லண்டன், லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் 1975 ஜூன் 21ஆம் திகதி நடைபெற்ற மிகவும் பரபரப்பான இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை 17 ஓட்டங்களால் வெற்றிகொண்டு மேற்கிந்தியத் தீவுகள் சம்பியனானது.
அணித் தலைவர் க்ளைவ் லொய்ட் அபார சதம் குவித்து மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றிக்கு அடிகோலினார்.
மேற்கிந்தியத் தீவுகளினால் நிர்ணயிக்கப்பட்ட 292 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 274 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
அவுஸ்திரேலியாவின் 5 ரன் அவுட்களில் அப்போதைய இளம் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் 3இல் பங்காற்றியிருந்தது விசேட அம்சமாகும்.
எண்ணிக்கை சுருக்கம்
மேற்கிந்தியத் தீவுகள் 60 ஓவர்களில் 291 - 8 விக். (க்ளைவ் லொய்ட் 102, ரொஹான் கன்ஹாய் 55, கீத் பொய்ஸ் 34, கெரி கில்மோ 48 - 5 விக்., ஜெவ் தொம்சன் 44 - 2 விக்.)
அவுஸ்திரேலியா 58.4 ஓவர்களில் சகலரும் ஆட்டம் இழந்து 274 (இயன் செப்பல் 62, அலன் டேர்னர் 40, டக் வோல்டர்ஸ் 35, கீத் பொய்ஸ் 50 - 4 விக்.)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM