(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
குரூந்தூர்மலை விவகாரம் தொடர்பான பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு நீதவான் பதவி விலகி நாட்டு விட்டு வெளியேறியுள்ளார். சட்டத்துறை சார்பான விடயம் என்று ஆணைக்குழுவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசாங்கம் ஒதுங்கியிருப்பது பொருத்தமற்றது. உண்மையை பகிரங்கப்படுத்த அரசாங்கம் முறையான விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (4) இடம்பெற்ற சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
வடக்கு மாகாணங்களில் உள்ள பல வைத்தியசாலைகளின் தேவைகளுக்காக புலம்பெயர் நாடுகளில் இருந்து உதவிகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு என்டோஸ்கோபி இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அனுராதபுரம் வைத்தியசாலையில் நடைபெற்ற கூட்டமொன்றில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குறித்த இயந்திரத்தை அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு அங்குள்ள பணிப்பாளர் ஆலோசனை வழங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.
அரசாங்கத்தினால் கூட செய்ய முடியாதுள்ள விடயத்தை புலம்பெயர் தமிழர்களால் செய்யப்படுகின்றது.இவ்வாறாக வழங்கப்பட்ட என்டோஸ்கோபி இயந்திரத்தை அனுராதபுரத்திற்கு மாற்ற முடியாது என்பதனை கூறிக்கொள்வதுடன்,இதனை தடுத்து நிறுத்த சுகாதார அமைச்சர் முடிவெடுக்க வேண்டும் என்றும் கோருகின்றேன்.
முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல் தொடர்பில் வட மாகாண சட்டத்தரணிகள் சங்கத்தின் அழைப்பின் பேரில் சட்டத்தரணிகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை நிதிபதி தனக்கு விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு சென்றுள்ளதால் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் இயங்க முடியாத நிலைமையில் இருக்கின்றது.
நீதவானுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் அவர் பிடியாணை பிறப்பித்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்திருக்கலாம் என்று தற்போது கூறினாலும் கடந்த காலங்களில் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் பல்வேறு கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றுக்கான நீதி கிடைக்கவில்லை. இவ்வாறான நிலைமையில் அச்சத்தால் அவர் வெளியேறி சென்றுள்ளார்.
குருந்தூர்மலை விவகாரத்தில் அங்கு கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் சிவலிங்கத்தை ஒத்த படமொன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் உள்ளது. அதனை சிவலிங்கமாக தொல்பொருள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஆனால் குருந்தூர் மலையில் கண்டெடுக்கப்பட்டதை பௌத்த மதத்தின் அடையாளமாக காட்டுகின்றனர். உண்மைகள் அழிக்கப்பட்டு கட்டாயப்படுத்தப்பட்டு வரலாறுகள் மாற்றப்படுகின்றன. சிவலிங்கம் ஆலயம் இடிக்கப்பட்டு பௌத்த விகாரை கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் குருந்தூர் மலை விவகாரம் தொடர்பான பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு நீதவான் பதவி விலகி நாட்டு விட்டு சென்றுள்ளார். இதனை சட்டத்துறை சார்பான விடயம் என்று ஆணைக்குழுவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒதுங்கியிருப்பது பொருத்தமற்றது. தான் முறையிட்டாலும் அதற்கான பாதுகாப்பை இவர்கள் வழங்க மாட்டார்கள் என்பதனாலேயே அவர் வெளியேறி சென்றிருப்பார். அரசாங்கம் இதனை தட்டிக்கழிக்காது சரியான விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM