கஞ்சாவை தன்னுடன் வைத்திருந்த பெண்ணொருவரை கல்முனை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.

குறித்த பெண் 960 கிராம் கஞ்சா போதைப்பொருளை வைத்திருந்த போது பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போதே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பெண்ணிடம் இருந்த கஞ்சாவை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பறிமுதல் செய்ததுடன் மருதமுனை பொலிஸாரிடம் மேலதிக விசாரணைக்காக குறித்த பெண் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.