சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த சிறந்த நிபந்தனைகளை அரசாங்கம் செயற்படுத்தவில்லை - ஹர்ஷ டி சில்வா

Published By: Vishnu

04 Oct, 2023 | 07:13 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

சர்வதேச நாணய நிதியத்தை குறிப்பிட்டுக் கொண்டு வரி மற்றும் சேவை கட்டணங்களை அதிகரிப்பதை மாத்திரம் இலக்காக கொண்டுள்ள அரசாங்கம் முன்வைக்கப்பட்ட சிறந்த நிபந்தனைகளை இதுவரை நிறைவேற்றவில்லை.

 முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை செயற்படுத்தாமல் நாடு என்ற ரீதியில் ஒருபோதும் முன்னேற்ற முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04) இடம்பெற்ற சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

அரசாங்கம் எடுக்கும் சகல தீர்மானங்களையும் எதிர்க்கும் பாரம்பரியமான எதிர்க்கட்சியாக நாங்கள் செயற்படவில்லை.சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நாட்டுக்கு வருகை தந்த போது நாட்டுக்காகவும்,மக்களுக்காகவும் ஒத்துழைப்பு வழங்குமாறு வலியுறுத்தினோம்.இதனை அரசாங்கம் நன்கு அறியும்.

சர்வதேச நாணய நிதியத்தினால் மக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள் என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.நாணய நிதியத்தை குறிப்பிட்டுக் கொண்டு வரி மற்றும் சேவை கட்டணங்களை அதிகரிப்பதை மாத்திரம் அரசாங்கம் பிரதான இலக்காக கொண்டுள்ளது.

நாட்டு மக்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தாத பல நிபந்தனைகளை சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ளது.ஊழல் மோசடியால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்று மக்கள் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

 ஊழல் எதிர்ப்பு சட்டமியற்றப்பட்டுள்ளது.ஆனால் ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழு இதுவரை நியமிக்கப்படவில்லை. எதிர்வரும் நவம்பர் மாதம் 24 ஆம் திகதிக்குள் ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும்.

2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் தேசிய கணக்காய்வு சட்டத்தையும்,கம்பனி சட்டத்தையும் திருத்தம் செய்ய வேண்டும்.

அத்துடன் போட்டித்தன்மையான விலை மனுகோரல் தொடர்பான விடயங்களை வெளிப்படுத்தும் வகையில் திறந்த வலைத்தளம் ஒன்றை எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்குள் உருவாக்க வேண்டும்.இவ்வாறான 16 முக்கிய சிறந்த நிபந்தனைகளை சர்வதேச  நாணய நிதியம் முன்வைத்துள்ளது.

நாட்டு மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் நாட்டுக்காக முன்வைக்கப்பட்டுள்ள பல சிறந்த நிபந்தனைகளை அரசாங்கம்  செயற்படுத்தாத காரணத்தினால் தான் இரண்டாம் கட்ட தவணை வழங்கல் இழுபறி நிலையில் உள்ளது.

 நாணய நிதியம் வழங்கியுள்ள நிபந்தனைகள் கசப்பானதாக இருந்தாலும் அதனை செயற்படுத்தாமல் நாடு என்ற ரீதியில் ஒருபோதும் முன்னேற்ற முடியாது.எமது அரசாங்கத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் விரிவுப்படுத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காத்தான்குடியில் சந்தேகத்தில் கைதான 30 பேரும்...

2024-03-02 01:12:34
news-image

மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்குவதை ஏற்க முடியாது...

2024-03-02 00:04:10
news-image

14 வருடங்களாகத் தொடரும் கிழக்குத் தமிழர்களின்...

2024-03-01 23:15:08
news-image

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர்...

2024-03-01 21:58:30
news-image

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த இடமளிக்கப்போவதில்லை...

2024-03-01 13:36:14
news-image

நீருக்கு வரி அறவிடப்படமாட்டாது - பவித்ரா...

2024-03-01 13:31:26
news-image

பாதசாரி கடவைக்கு அண்மித்த பகுதியில் வீதியை...

2024-03-01 20:11:47
news-image

திருகோணமலை டொக்கியாட் கடற்கரையில் அடையாளம் தெரியாத...

2024-03-01 20:00:40
news-image

நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது சாந்தனின் பூதவுடல்; நீர்கொழும்பில்...

2024-03-01 19:56:04
news-image

சாந்தன் சொந்த நாட்டுக்கு திரும்புவதில் ஏற்பட்ட...

2024-03-01 18:49:43
news-image

இந்து சமுத்திரத்திற்குள் நாட்டின் பொருளாதாரத் திட்டங்களுக்குப்...

2024-03-01 17:52:47
news-image

யாழ். போதனா வைத்தியசாலை சூழலில் தரித்து...

2024-03-01 17:48:58