பயங்கரமான கோடைகாலம் குறித்து நியுசவுத்வேல்ஸ் பிரதமர் எச்சரித்துள்ளார்
நியுசவுத்வேல்சின் தென்கிழக்கு கரையோரத்தில் உள்ள பெகாபள்ளத்தாக்கில் பாரிய காட்டுதீ பெருமளவு புதர்நிலத்தையும் மூன்றுவீடுகளையும் அழித்துள்ள நிலையில் பிரதமர் அன்டனி அல்பெனிசும் நியுசவுத்வேல்ஸ் பிரதமர் கிறிஸ் மின்சும் அந்த பகுதிக்கு சென்றுள்ளனர்.
பகலிரவாக போராடி பல கிராமசமூகங்களை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசரசேவை பிரிவினருக்கு நியுசவுத்வேல்ஸ் பிரதமர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
இது சமூகத்தை பாதுகாப்பதற்கான அவர்களின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றது மாநிலம் அவர்களின் பெரும் கடன்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரமான கோடைக்காலத்தை எதிர்கொள்வதற்கு தயாராகயிருக்குமாறு நியுசவுத்வேல்ஸ் மக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒக்டோபரின் முதல்வாரத்தில் இருக்கின்றோம் ஆனால் கோடைக்காலத்தின் நடுப்பகுதி காலநிலையை எதிர்கொள்கின்றோம் என நியுசவுத்வேல்ஸ் பிரதமர் தெரிவித்துள்ளார்.
பல நாட்கள் 30 செல்சியசிற்கு மேற்பட்ட வெப்பநிலை காணப்படும் காட்டுதீக்கு இந்த சூழல் பிடிக்கும் இதனால் கிராமிய சமூகங்களிற்கு பெரும் பாதிப்பு ஏற்படலாம் என அவர் எச்சரித்துள்ளார்.
தற்போது காட்டுதீ காணப்படும் பகுதிக்கு சுற்றுலா செல்வதற்கு திட்டமிட்டுள்ளவர்கள் அருகில் அவசரசேவை நிலையம் எங்குள்ளது என்பது குறித்து தெரிந்து வைத்திருக்கவேண்டும் என நியுசவுத்வேல்ஸ் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டும் ஆனால் காட்தீயினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் என்னவென்பதை அவர்கள் தெரிந்துவைத்திருக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெக்கா பள்ளத்தாக்கில் செவ்வாய்கிழமை மூண்டுள்ள காட்டுதீ பெரும் பகுதியை எரித்து சாம்பலாக்கியுள்ளதுடன் மூன்று வீடுகளையும் அழித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM