மாணவியை கண்டித்த ஆசிரியரை தாக்கிய மாணவியின் தந்தை உள்ளிட்ட இருவர் கைது

Published By: Digital Desk 3

04 Oct, 2023 | 02:35 PM
image

பாடசாலைக்கு ஒழுங்கான  வரவில்லை என மாணவியை கண்டித்த ஆசிரியர் மீது மாணவியின் தந்தை உள்ளிட்ட இருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (03) தாக்குதல் நடாத்தியுள்ளனர். 

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

பாடசாலைக்கு ஒழுங்கான வரவில்லை எனும் காரணத்தால் பாடசாலை அதிபர் , ஆசிரியர்கள் மாணவியை கண்டித்ததால் , அந்த பாடசாலை நிர்வாகத்துடன் முரண்பட்டு , அந்த பாடசாலையில் இருந்து விலகி, பருத்தித்துறை பகுதியில் உள்ள பிறிதொரு பாடசாலையில் இணைந்து கற்றல் நடவடிக்கையை ஆரம்பித்தார். 

புதிதாக சேர்ந்த பாடசாலைக்கும் மாணவி ஒழுங்காக சமூகமளிக்கவில்லை. அதனால் பாடசாலை ஆசிரியர் ஒருவர் மாணவியை கண்டித்துள்ளார். 

இந்நிலையில், பாடசாலைக்கு சென்ற மாணவியின் தந்தையும் , பிறிதொருவருமாக  பாடசாலை வாசலில் காத்திருந்து , பாடசாலைக்கு வெளியே ஆசிரியர் வந்த போது , ஆசிரியர் மீது சரமாரியாக தாக்கியுள்ளனர். 

அதனால் காயமடைந்த ஆசிரியர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார் ஆசிரியரை தாக்கிய மாணவியின் தந்தை உள்ளிட்ட இருவரை கைது செய்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாரிகம கடலில் மூழ்கிய மூன்று வெளிநாட்டுப்...

2025-01-16 11:58:05
news-image

கல்கிசை துப்பாக்கிச் சூடு ; நால்வர்...

2025-01-16 11:49:13
news-image

காத்தான்குடியில் பூட்டப்பட்ட வீட்டில் பொது சுகாதார...

2025-01-16 11:55:50
news-image

யாழில் அதீத போதையுடன் இரு மாணவர்கள்...

2025-01-16 11:36:49
news-image

யாழில் செப்பு கம்பிகளுக்காக அறுக்கப்படும் தொலைபேசி...

2025-01-16 11:26:55
news-image

மது போதையில் தகராறு ; ஒருவர்...

2025-01-16 11:04:14
news-image

நிட்டம்புவையில் சட்டவிரோத மாட்டிறைச்சி கடை சுற்றிவளைப்பு...

2025-01-16 11:53:48
news-image

மன்னார் நீதிமன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு...

2025-01-16 10:34:21
news-image

சீனாவில் முதலீட்டு அமர்வில் ஜனாதிபதி பங்கேற்பு

2025-01-16 11:25:51
news-image

நாமலை சந்தித்து கலந்துரையாடினார் இந்திய உயர்ஸ்தானிகர்...

2025-01-16 10:01:33
news-image

இந்திய மீனவர்கள் 6 பேர் விடுதலை 

2025-01-16 09:55:04
news-image

யாழ். வடமராட்சியில் இருவரிடம் தொலைபேசி ஊடாக...

2025-01-16 10:12:56