மக்கள் மீது தொடர்ந்து வரி விதிக்கும் கொள்கையில்லை - நிதி இராஜாங்க அமைச்சர்

Published By: Vishnu

04 Oct, 2023 | 02:59 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்காக ஊழியர் மட்ட பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்கள் மீது தொடர்ந்து வரி விதிக்கும் கொள்கை கிடையாது. ஏற்றுக்கொண்ட நிபந்தனைகளை மீள்பரிசீலனை செய்வது குறித்து நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04) இடம்பெற்ற அமர்வின் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இருபத்தேழு இரண்டின் கீழ்  முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட முதல் தவணை நிதியம் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி கிடைக்கப்பெற்றது.

இரண்டாம் தவணை நிதியை பெற்றுக்கொள்வதற்கு தற்போது இரு மற்றும் பல்தரப்பு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்த நிலையில் தான் 2022.05.01 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது.இதற்கமைய கடந்த செப்டெம்பர் மாதம்  ஊழியர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டது. சர்வதேச நாணய நிதியம்  முன்வைத்த முதல் கட்ட 51 நிபந்தனைகளில் 47 நிபந்தனைகளை நிறைவேற்றியுள்ளோம்.

நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கு பல கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் பாராளுமன்றத்தின் ஊடாக பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை நெருக்கடிக்குள்ளாக்குவதற்கு  ஒரு தரப்பினர் நீதிமன்றம் சென்றதையும் நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இரண்டாம் தவணை நிதியுதவி வழங்கலை நாணய நிதியம் இடைநிறுத்தியுள்ளதாக குறிப்படப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.நிறைவடைந்த 9 மாத காலத்தில் அரச வருமானம் 43.5 சதவீதமாக உயர்வடைந்துள்ள போதும் 2023 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் குறிப்பிட்ட அரச வருமான இலக்கை அடைய முடியவில்லை.

பொருளாதார மீட்சிக்கு பாரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 70 சதவீதமாக காணப்பட்ட பணவீக்கம் தற்போது 1.3 ஆக குறைவடைந்துள்ளது.

அதே போல்  உணவல்லாத பணவீக்கம் -5 சதவீதமாக குறைவடைந்துள்ளது.இந்த ஆண்டுக்குள் பணவீக்கத்தை நிலையான தன்மைக்கு கொண்டு வர  உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

வெளிநாட்டு கையிறுப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக வாகன இறக்குமதி தற்காலிகமாக  தடை செய்யப்பட்டது.எதிர்வரும் வாரமளவில் தனியாள் பாவனை வாகன இறக்குமதியை தவிர்த்து வணிக வாகன இறக்குமதி மீதான தடையை தளர்த்த  உத்தேசித்துள்ளோம்.

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்காக ஊழியர் மட்ட பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்கள் மீது தொடர்ந்து வரி விதிக்கும் கொள்கை கிடையாது.ஏற்றுக்கொண்ட நிபந்தனைகளை மீள்பரிசீலனை செய்வது குறித்து நாணய  நிதியத்துடன்  பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம்.

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புக்கான பேச்சுவார்த்தைகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுகின்றன.இலங்கையின் பிரதான நிலை கடன் வழங்குநர்களான சீனா,இந்தியா ,ஜப்பான் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் முழுமையான ஒத்துழைப்பு வழங்கும்  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொடங்கொடையில் வீடொன்றின் மீது துப்பாக்கி பிரயோகம்

2025-01-15 10:45:40
news-image

கொழும்பில் சில பகுதிகளுக்கு நீர்வெட்டு

2025-01-15 10:30:14
news-image

துர்நாற்றம் வீசும் பேர வாவியை சுத்தம்...

2025-01-15 09:59:06
news-image

யாழ். வல்வெட்டித்துறையில் நடைபெற்ற மாபெரும் பட்டத்திருவிழா!

2025-01-15 10:39:04
news-image

இன்றைய வானிலை

2025-01-15 06:15:45
news-image

நிகழ்நிலை தளங்களில் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள்...

2025-01-14 19:21:46
news-image

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று...

2025-01-15 01:36:26
news-image

இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு...

2025-01-14 19:58:50
news-image

இலங்கையில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளை தமிழக...

2025-01-14 19:39:54
news-image

நாளொன்றுக்கு 2500 கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கை...

2025-01-14 19:55:32
news-image

எமது ஆட்சியை மீள திருப்புவதற்கு எந்த...

2025-01-14 21:47:39
news-image

13 இல் கைவைக்க நாங்கள் முனையவில்லை...

2025-01-14 19:36:45