மஸ்கெலியா - சாமிமலை பிரதான வீதியில் லொறி பள்ளத்தில் வீழ்ந்து 22 பேர் காயம்!

04 Oct, 2023 | 01:17 PM
image

மஸ்கெலியா - சாமிமலை பிரதான வீதி, பிரன்சுவிக் தேயிலை தோட்டத்தின் குயின்ஸ்லாந்து பகுதியில், சிறிய ரக லொறியொன்று வீதியிலிருந்து விலகி சுமார் 40 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 22 பேர் காயமடைந்து மஸ்கெலியா மற்றும் டிக்ஓயா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மஸ்கெலியா, பிரன்சுவிக் தேயிலைத் தோட்டத்தின் குயின்ஸ்லாந்து பிரிவில் உள்ள படஞ்சி தோட்டத் தொழிலாளர்களே  காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 17 பெண்களும் 5 ஆண்களும் அடங்குவர். 

காயமடைந்த 17 பேர் முதலில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக டிக் ஓயா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மஸ்கெலியா வைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரி இர்ஷாத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலகு ரயில் போக்குவரத்து திட்டத்துக்கு ஜைகா...

2026-02-17 18:31:47
news-image

பாடசாலைக் கட்டடங்களில் அவசர கால வெளியேற்றப்...

2026-02-17 18:28:00
news-image

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் நீக்கம்: சட்டமூலம்...

2026-02-17 18:07:20
news-image

IMF முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா...

2026-02-17 18:17:29
news-image

இலங்கையின் மீளக் கட்டியெழுப்பும் திட்டம் மீதான...

2026-02-17 18:02:09
news-image

ரயில் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்

2026-02-17 17:44:02
news-image

பலாலி அம்மன் ஆலயத்துக்குச் செல்லும் வீதியை...

2026-02-17 17:46:56
news-image

2,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

2026-02-17 17:30:57
news-image

நீர்கொழும்பு களப்பைப் பாதுகாத்து சுற்றுலா ஈர்ப்பை...

2026-02-17 19:54:35
news-image

மூதூரில் டிப்பர் வாகனத்தில் கட்டாக்காலி மாடு...

2026-02-17 17:01:19
news-image

இலங்கை மற்றும் ஜப்பான் இடையே பொருளாதார...

2026-02-17 16:44:37
news-image

பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் ; கொழும்பில்...

2026-02-17 16:14:10