(நெவில் அன்தனி)
சீனாவில் நடைபெற்றுவரும் 19ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் இலங்கையின் நடீஷா டில்ஹானி லெக்கம்கே வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
ஹங்ஸோ ஒலிம்பிக் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற பெண்களுக்கான ஈட்டி எறிதலில் 61.57 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்த நடீஷா டில்ஹானி லேக்கம்கே புதிய தேசிய சாதனையுடன் ஆசிய வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார்.
72 வருட ஆசிய விளையாட்டு விழா வரலாற்றில் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மைதான நிகழ்ச்சியில் இலங்;கையர் ஒருவர் பதக்கம் வென்றது இதுவே முதல் தடவையாகும்.
மேலும், இந்த வருடம் தேசிய விளையாட்டு விழாவுடன் மெய்வல்லுநர் விளையாட்டிலிருந்து ஓய்வுபெற்ற நதீகா லக்மாலிக்கு சொந்தமாக இருந்த 60.64 மீற்றர் என்ற தேசிய சாதனையை நடீஷா டில்ஹானி லேக்கம்கே முறியடித்து புதிய சாதனை படைத்தார்.
இப் போட்டியில் இந்தியாவின் அன்னு ராணி (62.92 மீற்றர்) தங்கப் பதக்கத்iதையும் சீனாவின் ஹுய்ஹுய் லியூ (61.29 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.
2006ஆம் ஆண்டு தோஹாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் சுசன்திகா ஜயசிங்க 100 மீற்றர் (வெள்ளி), 200 மீற்றர் (வெண்கலம்) ஆகிய நிகழ்ச்சிகளில் பதக்கங்கள் வென்ற பின்னர் இலங்கைக்கு மெய்வல்லுநர் போட்டியில் பதக்கம் கிடைத்திருப்பது இதுவே முதல் தடவையாகும்.
இதேவேளை, ஹங்ஸோ 2022 ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு கிடைத்த 2ஆவது வெள்ளிப் பதக்கம் இதுவாகும்.
மகளிர் இருபது கிரிக்கெட் போட்டியில் இலங்கை வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM