(எம்.வை.எம்.சியாம்)
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மஹரகம சீதா எனும் யானையின் உடலில் 8 துப்பாக்கி தோட்டாக்கள் காணப்பட்டமை தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான யானைக்கு சிகிச்சையளிக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்று (03) ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது அதன் உடலில் 8 துப்பாக்கி தோட்டாக்கள் காணப்பட்டமை தெரியவந்துள்ளதாக யானைக்கு சிகிச்சையளிக்கும் கண்டி தலதா மாளிகையின் கால்நடை மருத்துவர் கலாநிதி தரிந்து விஜேகோன் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்கேன் அறிக்கையின்படி, அவை 3 சென்றிமீட்டருக்கும் குறைவான தோல் பகுதியிலேயே காணப்படுகிறது எனவும் தோட்டாத் துண்டுகளால் உடலுக்குள் ஏற்பட்ட காயங்கள் ஆறுவதை இதுவரை அவதானிக்க முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் உடலுக்குள் பாய்ந்த தோட்டாக்கள் ரப்பர் வகையா அல்லது ஈயத் துண்டுகளா என்பதை இன்னும் உறுதிப்படுத்த முடியாதுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர், அதனை அடையாளம் காண்பதற்கான அறுவை சிகிச்சையை மேற்கொள்வது குறித்து மருத்துவர்கள் இன்னும் முடிவு செய்யவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
மஹியங்கனை ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற பெரஹரா ஊர்வலத்தில் 47 வயதான சீதா யானை பங்கேற்ற பின்னர் விஹாரையின் மைதானத்தில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தபோது கடந்த சனிக்கிழமை (30) அதன் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. வனவிலங்கு அதிகாரி ஒருவரால் யானை மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM