பரத் - ரகுமான் இணைந்து மிரட்டும் 'சமாரா'

03 Oct, 2023 | 07:43 PM
image

நடிகர்கள் பரத் - ரகுமான் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'சமாரா' எனும் திரைப்படம் வெளியாகும் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் சார்லஸ் ஜோசப் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'சமாரா'. இதில் பரத், ரகுமான், பொலிவுட் நடிகர் மீர்சர்வார், சோனாலி சூடன், ஸ்ரீ லா லட்சுமி, ராகுல் பின்னோஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

சினு சித்தார்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தீபக் வாரியர் மற்றும் கோபி சுந்தர் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.‌ 

சயின்ஸ் ஃபிக்சன் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பீகாக் ஆர்ட் ஹவுஸ் என்ற பட நிறுவனம் சார்பில் எம் கே சுபாகரன், அனுஜ் வர்கீஸ், வில்யாடத் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' ஃபேமிலி சென்டிமென்ட் மற்றும் சயின்ஸ் ஃபிக்சன் இரண்டையும் கலந்து பரபரப்பான திரில்லர் திரைப்படமாக இதனை உருவாக்கி இருக்கிறோம். இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும்'' என்றார்.

இந்தப் படத்தின் முன்னோட்டம் வெளியாகி இணையத்தில் முன்னணி இடத்தை பிடித்திருக்கிறது. மேலும் இந்தத் திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13ம் திகதியன்று பட மாளிகைகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.‌

முக்கிய செய்திகள்

icon-left
icon-right