நடிகர் ரவி தேஜா நடிக்கும் 'டைகர் நாகேஸ்வரராவ்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

03 Oct, 2023 | 05:26 PM
image

தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான ரவி தேஜா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'டைகர் நாகேஸ்வர ராவ்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் வம்சி இயக்கத்தில் தயாராகி இருக்கும் பான் இந்திய திரைப்படம் 'டைகர் நாகேஸ்வரராவ்'.

இதில் ரவி தேஜா, பொலிவுட் நடிகை நூபுர் சனோன், காயத்ரி பரத்வாஜ், ஜிஷு சென்குப்தா, அனுபம் கேர், முரளி சர்மா, ஹரிஷ் பெராடி, ஆடுகளம் நரேன் நாசர் அனுகீர்த்தி வாஸ், சுதேவ் நாயர்  உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஆர் மதி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். உண்மை சம்பவத்தை தழுவி எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஒக்டோபர் 20ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் முன்னோட்டம் இன்று மும்பையில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வின்போது வெளியிடப்பட்டது.

முன்னோட்டத்தில் 1970களில் ஆந்திராவில் உள்ள ஸ்டூவர்ட்பூரம் எனும் பகுதியில் வாழ்ந்த டைகர் நாகேஸ்வரராவ் என்ற திருடனின் வாழ்க்கை வரலாறை தழுவி பல காட்சிகள் இடம்பெற்று இருப்பதாலும், ஆக்ஷன் காட்சிகளும், அதிரடி சண்டை காட்சிகளும் இடம்பெற்று இருப்பதுடன் கவர்ச்சி பாடல், நூபுர் சனோனின் அழகு.. என பல அம்சங்களும் இருப்பதால் இந்த திரைப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடத்தில் அதிகரித்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகை சோனியா அகர்வால் நடிக்கும் 'WILL'...

2025-01-18 16:13:54
news-image

நடிகை ரூபா நடிக்கும் 'எமகாதகி '...

2025-01-18 16:13:40
news-image

விஜய் அண்டனி நடிக்கும் 'ககன மார்கன்'...

2025-01-18 16:13:23
news-image

இளம் ரசிகர்களை உற்சாகமாக நடனமாட வைக்கும்...

2025-01-18 16:13:12
news-image

சூரி நடிக்கும் 'மாமன்' படத்தின் அப்டேட்

2025-01-18 16:12:54
news-image

பிரான்சில் வெளியாகும் 'பறவாதி' திரைப்படம்

2025-01-18 06:29:01
news-image

நடிகர் அப்புகுட்டி நடிக்கும் 'பிறந்தநாள் வாழ்த்துக்கள்'...

2025-01-17 15:33:58
news-image

பவன் கல்யாண் நடிக்கும் 'ஹர ஹர...

2025-01-17 15:32:15
news-image

வனிதா விஜயகுமார் நடிக்கும் மிஸஸ் &...

2025-01-17 15:31:55
news-image

சாதனை படைக்கும் அஜித் குமாரின் 'விடாமுயற்சி'...

2025-01-17 17:19:13
news-image

நடிகர் சூரி வெளியிட்ட 'டெலிவரி பாய்'...

2025-01-16 17:05:13
news-image

பார்த்திபன் வெளியிட்ட ' புரவியாட்டம் '...

2025-01-16 17:04:38