நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் இரண்டு மடங்கு வேகத்தில் உயர்ந்து வருவதாக அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. எம்முடைய உறவினர்கள், நண்பர்கள் என பலரும் சர்க்கரை நோயாளிகளாக மாறிவிட்டார்கள். அதே தருணத்தில் இன்றைய திகதியில் இரத்த சர்க்கரையின் அளவை நாமே தெரிந்து கொள்ளும் வகையில் மேம்பட்ட மருத்துவ தொழில்நுட்பக் கருவிகள் சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது அதில் குளுக்கோ மீற்றரும் ஒன்று.
பொதுவாக நாம் ரத்த சர்க்கரை அளவை தெரிந்து கொள்ள காலையில் எதுவும் சாப்பிடாமல் ஒரு முறை ரத்தப் பரிசோதனை.. காலை உணவை சாப்பிட்ட பிறகு ஒன்றரை மணித்தியாலத்திற்கும் பிறகு ஒரு முறை ரத்தப் பரிசோதனை, எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ளும் வகையிலான ரேண்டம் இரத்த அளவு பரிசோதனை, இவைகள் அல்லாமல் ஹெச் பி ஏ ஒன் சி எனப்படும் துல்லியமான ரத்த சர்க்கரையின் அளவு குறித்த பரிசோதனை என பல பரிசோதனைகள் உண்டு.
இதில் சர்க்கரை நோயாளிகளாக இருப்பவர்கள் மருத்துவர்களின் அறிவுரையின் பெயரில் குளுக்கோ மீற்றர் எனும் ரத்த சர்க்கரை அளவை எடுத்துரைக்கும் கருவியை பயன்படுத்துவர். எம்மில் பலருக்கும் இரத்த சர்க்கரையின் அளவை எடுத்துக்காட்டும் குளுக்கோ மீற்றர் எனும் இந்த கருவியின் அளவுகள் சரியானதா..? என்ற சந்தேகம் எம்மில் பலருக்கும் இன்றும் நீடிக்கிறது.
இது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் விளக்கமளிக்கையில், '' குளுக்கோ மீற்றர் எனும் கருவியின் மூலமாக கண்டறிந்து கொள்ளும் உங்களுடைய இரத்த சர்க்கரையின் அளவு- ஆய்வகத்தில் மேற்கொள்ளப்படும் உங்களுடைய இரத்த சர்க்கரையின் அளவு ...ஆகிய இவற்றுக்கிடையே சிறிய அளவில் வேறுபாடு இருப்பது உண்மைதான். இதற்கும் சில காரணங்கள் உண்டு.
ஆய்வகத்தில் மேற்கொள்ளப்படும் ரத்த சர்க்கரையின் அளவிற்காக உங்களிடமிருந்து எடுத்துக்கொள்ளும் ரத்தம் நரம்பின் ஊடாக உறிஞ்சப்படுகிறது. ஆனால் குளுக்கோ மீற்றர் எனும் கருவியின் மூலம் மேற்கொள்ளப்படும் ரத்த சர்க்கரை அளவிற்காக உங்களுடைய கைவிரல்களின் ஏதேனும் ஒன்றிலிருந்து மிக மிக சிறிய அளவிலான ரத்தம் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுகிறது.
அதே தருணத்தில் எலக்ட்ரோ கெமிக்கல் என்ற முறையில் உங்களுடைய குளுக்கோ மீற்றரில் பொருத்தப்பட்டிருக்கும் என்சைம் தொழில்நுட்பத்தில் அடிப்படையில் உங்களுடைய இரத்த சர்க்கரையின் அளவு வினாடி கணக்கிலான வேகத்தில் கணக்கிடப்பட்டு அதில் காண்பிக்கப்படுகிறது. உலகளவில் இதன் முடிவுகள் துல்லியம் என பலமுறை நிரூபிக்கப்பட்டிருந்தாலும்.. பல்வேறு காரணங்களால் இந்த குளுக்கோ மீற்றர் எடுத்துரைக்கும் ரத்த சர்க்கரையின் அளவு ஐந்து முதல் 15 என்ற எண்ணிக்கை வரையில் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருப்பதற்கான சாத்தியக்கூறு அதிகம்.
அதாவது இரத்த சர்க்கரையின் அளவை குளுக்கோமீற்றரில் பரிசோதிக்கும் போது உங்களுக்கு 115 என்றிருந்தால்.. உங்களுடைய இரத்த சர்க்கரையின் அளவு 100 ஆக இருக்கக்கூடும்.
மேலும் குளுக்கோ மீற்றர் எனும் இரத்த அளவை பரிசோதிக்கும் கருவி அடிக்கடி தாழ்நிலை சர்க்கரை அளவிற்கு செல்லும் நோயாளிகளுக்கு பெரும் வர பிரசாதமாக அமைந்திருக்கிறது. இதன் மூலம் அவர்கள் தங்களது இரத்த சர்க்கரையின் தாழ் நிலையை உடனடியாக உணர்ந்து அதற்கான நிவாரணத்தை எடுத்துக் கொள்கிறார்கள்.
வேறு சிலர் விருந்துகளில் பங்கு பற்றி நெருக்கடிகளுக்கு ஆளாகி பசியாற அமரும் முன்பு ரத்த சர்க்கரை அளவை தெரிந்து கொள்ள விரும்புவர். அவர்களுக்கும் தங்களுக்கு விருப்பமான உணவை பசியாறுவதற்கும் முன் இத்தகைய குளுக்கோ மீற்றர் எனும் கருவி மூலம் ரத்த சக்கரையின் அளவை தெரிந்து கொண்டு பசியாறுவர் அல்லது உணவை தவிர்ப்பர்.
இளம் தலைமுறையினர் பலரிடத்தில் மருத்துவ தொழில் நுட்ப கருவிகள் மீதான நம்பிக்கையின்மை என்பது இருந்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்ட உணவை உண்டால் உடனடியாக சர்க்கரையின் இரத்த சர்க்கரையின் அளவு உயரும் என நிரூபிப்பதற்கும் இத்தகைய குளுக்கோ மீற்றர் பயன்படுகிறது.
எனவே குளுக்கோ மீற்றர் எனும் இரத்த சர்க்கரையின் அளவை காண்பிக்கும் கருவியின் அளவில் சிறிய மாற்றங்கள் இருந்தாலும், அவை மேம்பட்ட மருத்துவ தொழில் நுட்பங்களால் உருவாக்கப்பட்டதால் அதனை தொடர்ந்து பாவிக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
டொக்டர் சிவபிரகாஷ்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM