(எம்.மனோசித்ரா)
இலங்கையில் அனைத்து ஆசிரியர்களையும் பட்டதாரிகளாக்கும் நோக்கில் தற்போது நடைமுறையிலுள்ள கல்வியல் கல்லூரிகளை பல்கலைக்கழகப் பீடங்களாக உயர்த்துவதற்காக கடைப்பிடிக்க வேண்டிய நிர்வாக மற்றும் சட்டப் பொறிமுறைகள் தொடர்பாகப் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக 2019.12.04 திகதிய அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைய மூத்த பேராசிரியர் குணபால நாணயக்கார தலைமையில் நிபுணத்துவக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவின் பரிந்துரைகள் தற்போதுள்ள 20 கல்வியல் கல்லூரிகளில் 19 கல்லூரிகளை பல்கலைக்கழக வளாகமாக உயர்த்துவதற்கும், அத்துடன் இலங்கை கல்வியியல் பல்கலைக்கழகம் எனும் பெயரில் புதிய பல்கலைக்கழகமொன்றை நிறுவுவதற்கும் ஏதுவான சட்ட ஏற்பாடுகளை விதிப்பதற்கு புதிய சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM