வவுனியா குளுமாட்டு சந்தியிலிருந்து மரக்காரம்பளை நோக்கி பயணிக்கும் பாதையில் தனியார் பேருந்து ஒன்று கடந்த நான்கு நாட்களாக அநாதரவற்ற நிலையில் நிற்பதால் தாம் அச்சத்தில் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கடந்த நான்கு நாட்களாக மரக்காரம்பளை வீதி காளி கோவிலுக்கு அருகே தனியார் பேரூந்து ஒன்று போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் வீதியில் தரித்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தாம் அச்சத்தில் உள்ளதாக பொது மக்கள் தெரிவித்தனர்.

இவ் விடயம் தொடர்பாக வவுனியா நெளுக்குளம் பொலிஸாரை தொடர்பு கொண்ட கேட்டபோது,

குறித்த தனியார் பேரூந்து இயந்திரக் கோளாறு காரணமாக தரித்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். எனினும் கடந்த நான்கு நாட்களாக தனியார் பேரூந்து தரித்து நிறுத்தப்பட்டுள்மையினால் வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் அப் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.