தடைப்பட்ட 98 ஆயிரம் வீடுகளின் நிர்மாணப் பணிகள் விரைவில் நிறைவடையும் - தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை

03 Oct, 2023 | 04:44 PM
image

ல்வேறு அரசாங்கங்களினால் ஆரம்பிக்கப்பட்டு அண்மையில் நிறுத்தப்பட்டுள்ள 98,000 வீடுகளின் நிர்மாணப் பணிகள் விரைவில் நிறைவடையும் என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியஆரச்சி தெரிவித்துள்ளார்.

அதற்கு 24,000 மில்லியன் ரூபா தேவைப்படும் என அவர் வலியுறுத்தினார். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைவாக நிர்மாணப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கங்கள் ஆரம்பித்த திட்டங்களை நிறைவேற்றாமல் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் புதிய திட்டங்களை ஆரம்பித்ததால் அரைகுறையாக இருந்த 98,000 வீடுகள் தேசிய வீடமைப்பு அமைப்பில் சேர்க்கப்பட்டதாக தலைவர் மேலும் தெரிவித்தார்.

உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு நிட்டம்புவ ரன்பொகுனுகம வீட்டுத்திட்டத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இன்று (03) இடம்பெற்ற நடமாடும் சேவையில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு கருத்து தெரிவித்த தலைவர் மேலும் கூறியதாவது:

“தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான நிட்டம்புவ ரன்பொகுனுகம வீடமைப்புத் திட்டம் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக உலக குடியிருப்பு தினத்துடன் இணைந்து இன்று நடமாடும் சேவையை முன்னெடுத்து வருகின்றோம். இந்த வீடமைப்புத் திட்டத்தில் வாழும் மக்கள் தாங்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளை எம்மிடம் முன்வைத்தனர். தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் ரன்பொகுனுகம வீடமைப்புத் திட்டம் உருவாக்கப்பட்ட போது சரியான திட்டமிடல் இல்லை என்பதே எனது கருத்து. இந்த வீடமைப்புத் திட்டம் நிர்மாணிக்கப்படும் போது, இங்குள்ள வீடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்ட போதிலும், கழிவுநீர் அமைப்பு, தொலைபேசி இணைப்புகள், குழாய்கள் அமைப்பு, வடிகால் அமைப்பு போன்ற வெளிப்புறத் தேவைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்படவில்லை. அந்தக் காலத்தில் முக்கியமானதாக இருந்தது, முதலில் வீடு கட்டி குடியேற வேண்டும் என்பதுதான். ஆனால், அதிகார சபை என்ற வகையில் நாம் இந்தப் பொறுப்புகளில் இருந்து தப்பிக்க முடியாது.

இன்று நாடு நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஒரு நாடாக நாம் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டோம். இப்போது நாம் படிப்படியாக ஒரு நல்ல திசையில் சென்றுகொண்டிருக்கிறோம். 

1½ ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் இதை பொறுப்பேற்றோம். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை, நகர அபிவிருத்தி அதிகாரசபை, கட்டடப் பொருட்கள் கூட்டுத்தாபனம் போன்ற பல நிறுவனங்கள் உள்ளன. 

எமது அமைச்சுக்கு சொந்தமான நிறுவனங்களில் கடந்த வருடம் அதிகூடிய பொருளாதார வளர்ச்சியை எட்டிய நிறுவனமாக மாற்ற முடிந்தது. எமது நிறுவனம் சம்பளம் வழங்குதல் உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்த்து, இன்று எமது நிறுவனம் நிதி ரீதியாக ஸ்திரமான நிலையில் உள்ளது. நாங்கள் சில முடிவுகளை எடுத்தோம். எனவே, இன்று கடன் மீள அறவிடுதலில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளோம். 

இந்த நிறுவனத்தை நாங்கள் பொறுப்பேற்ற போது, கடன் மீள அறவிடுவதன் மூலம் மாதாந்தம் 150 மில்லியன் ரூபாவையே பெற்றுக்கொண்டோம். ஆனால் இன்றைய நிலவரப்படி, கடனை மீள் அறவிடுவதன் மூலம் மாதாந்தம் 300 /-350 மில்லியன் ரூபாய் வரை பெறுகிறோம். 

எங்கள் நிறுவனத்துக்கு சம்பளம் கொடுக்க அரசு பணம் தருவதில்லை. சவால்களை முறியடித்து முன்னேறினால்தான் இந்த நிறுவனங்களை கட்டியெழுப்ப முடியும். இன்றைக்கு பல நிறுவனங்கள் நஷ்ட நிலையை அடைந்து சில நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஆனால், அந்த நிறுவனங்களில் நாங்கள் இல்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைப் போன்று எமது அமைச்சுக்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் இந்த நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு பெரும் பங்களிப்பை வழங்கி வருகின்றார். தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் அரைவாசியளவில் கட்டப்பட்டு நிறுத்தப்பட்ட சுமார் 98,000 வீடுகள் நாடு முழுவதிலும் உள்ளன. 

இந்த வீடுகளின் பணிகளை நிறைவு செய்வதற்கு சுமார் 24,000 மில்லியன் ரூபா தேவைப்படுகிறது. தேர்தல் வரும்போது ஐம்பதாயிரம், ஒரு இலட்சம் ரூபா காசோலையை கொடுத்துவிட்டு ஆட்சிக்கு வந்த பின் அந்த வீடுகளின் எஞ்சிய பணிகளைச் செய்ய முடியாத நிலையிலேயே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த நிறுவனத்தைப் பொறுப்பேற்றார். 

எந்த அரசு தொடங்கினாலும் ஆளும், எதிர்க் கட்சி என்ற வேறுபாடு பார்க்காமல் நிறுத்தப்பட்ட வீடுகளின் மீதிப் பணிகளை முடிக்குமாறு அமைச்சர் எங்களை அறிவுறுத்தினார். அது அவருடைய மிக உயர்ந்த குணம். இந்த அமைச்சுப் பொறுப்பை ஏற்கும் ஒவ்வொரு அமைச்சரும் தனக்கென தனித்துவம் மிக்க பணிகளைச் செய்து தனக்கென பெயர் எடுக்கவே விரும்புகின்றனர். 

இந்த வருடம் அரச திறைசேரியிலிருந்து 3,750 மில்லியன் ரூபா எமது நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றில் சுமார் 2,000 மில்லியன் ஏற்கனவே பெறப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நாங்கள் ஜனாதிபதியுடன் பேசுவோம் என நம்புகிறோம். அதன் பிறகு 3,750 மில்லியன் ரூபாய் அனைத்தும் கிடைக்கும் என நம்புகிறோம். இந்த குடியிருப்பு வாரத்தில் மாவட்ட அலுவலகங்கள் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகளை எங்கள் அதிகார சபை ஏற்பாடு செய்துள்ளது.

இன்று செய்தித்தாள்கள், தொலைக்காட்சி அலைவரிசைகளில் பல்வேறு வீட்டு கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதைப் பார்க்கிறோம். சில சமயங்களில் அதற்கான தீர்வுகளை வழங்குகிறோம். இதற்கு முறையான பொறிமுறை தேவை. 

எனவே, எதிர்வரும் காலங்களில் முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் ஒரு தகவல் அமைப்பை நிறுவி, இந்த நடவடிக்கைகளை முறையாக முன்னெடுப்பதற்கான பொறிமுறையை உருவாக்குவோம் என நம்புகிறோம். பின்னர், விருப்பமுள்ள கொடைவள்ளல்கள் வீட்டு கோரிக்கைகளுக்கு நிதி உதவி வழங்கலாம். அமைச்சரின் அறிவுறுத்தலின் அடிப்படையில், அந்த திட்டத்தை விரைவில் வெளியிடுவோம்" என்றும் அவர் கூறினார்.

இந்த வீட்டுத் திட்டம் 1986ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 1610 வீடுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த வீட்டுத் திட்டத்தில் ஏறக்குறைய இரண்டாயிரம் வீடுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. 

வீடுகளை இடமாற்றம் செய்தல், சட்ட விரோத குடியிருப்பாளர்களுக்கு தகவல் வழங்குதல், காணிப் பிரச்சினை மற்றும் எல்லைப் பிரச்சினைகளை தீர்ப்பது, வீடு கட்ட முடியாத பக்கத்து காணிகளை அபிவிருத்தி செய்தல், வீடமைப்புத் தேவைகள் மற்றும் ஏனைய வீட்டுப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்குதல் என்பன இங்கு மேற்கொள்ளப்பட்டன.

ரன்பொகுனுகம வீடமைப்புத் திட்டத்தில் இடம்பெற்ற இந்த நடமாடும் சேவையுடன் இணைந்து “செவன உதவி" வீட்டுத்திட்டத்தின் கீழ் 08 குடும்பங்களுக்கு 6 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகள் மற்றும் “உங்களுக்கு வீடு – நாட்டுக்கு நாளை” வீட்டுத் திட்டத்தின் கீழ் 11 குடும்பங்களுக்கு 71.5 மில்லியன் ரூபா பெறுமதியுள்ள காசோலைகளும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உப தலைவர் லக்ஷ்மன் குணவர்தன, மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சந்தயா சிறிவர்தன, கம்பஹா மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் அதுல பண்டார மற்றும் உள்ளூராட்சி சபை அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தசாசனம், தொல்பொருள் திணைக்கள செயற்பாடுகளே நல்லிணக்கத்துக்கு...

2023-12-06 19:49:32
news-image

மோசடி இடம்பெற்றுள்ளதை உறுதிப்படுத்தினால் பதவி விலகுவதாக...

2023-12-06 19:52:54
news-image

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை : 3...

2023-12-06 19:55:54
news-image

மலையக ரயில் சேவைகள் தாமதம்

2023-12-06 16:57:59
news-image

வாள் உற்பத்தியாளர்களை  கைது செய்து சட்ட...

2023-12-06 16:46:21
news-image

சர்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு மன்னாரில்...

2023-12-06 16:24:13
news-image

மூவரின் உயிரிழப்புக் காரணமான தனியார் பஸ்...

2023-12-06 16:17:51
news-image

தமிழர்களிற்கு சுயநிர்ணய உரிமை அவசியம் -...

2023-12-06 16:15:49
news-image

பரிசுப் பொருட்கள் மற்றும் கடன் வழங்குவதாக...

2023-12-06 16:42:40
news-image

ஹரக்கட்டாவின் மனுவை தள்ளுபடி செய்த மேன்முறையீட்டு...

2023-12-06 15:44:54
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2023-12-06 15:35:11
news-image

எட்கா குறித்த பேச்சுவார்த்தைகளை மார்ச்சில் நிறைவு...

2023-12-06 16:49:08