நீதிமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கை சிதைவடையும் - ஜி.எல்.பீரிஸ்

Published By: Vishnu

03 Oct, 2023 | 04:43 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி டி.சரவணராஜா முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானவை.காலம் தாழ்த்தாது விசாரணைகளை மேற்கொண்டு உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டும்.

இல்லையேல்  நீதிமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கை சிதைவடையும் என  பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எதிரணியின் உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (3) இடம்பெற்ற  குடியியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் ஆகியன மீதான  விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

அரசியலமைப்பின் 14 ஆவது  திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகளை நீதித்துறையே பாதுகாக்கிறது.

அரசியலமைப்பால் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் போது நீதிமன்றத்தின் ஊடாக அந்த முயற்சிகள் தடுக்கப்பட வேண்டும்.

நீதிபதிகள் அச்சமின்றி செயற்படுவதற்கு நீதித்துறை சுயாதீனமாக செயற்பட வேண்டும்.முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி பாரதூரமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

சுயாதீனமான முறையில் செயற்பட முடியாது ஆகவ பதவி விலகுவாக குறிப்பிட்டு அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.இலங்கையின் நீதிக்கட்டமைப்பில் இவ்வாறான  நிலை முன்னொருபோதும்  ஏற்படவில்லை.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் பாரபட்சமின்றிய வகையில் வெகுவிரைவாக விசாரிக்கப்பட்டு உண்மை பகிரங்கப்படுத்த வேண்டும்.இல்லையேல் நீதிமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கை சிதைவடையும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மலையக ரயில் சேவைகள் தாமதம்

2023-12-06 16:57:59
news-image

வாள் உற்பத்தியாளர்களை  கைது செய்து சட்ட...

2023-12-06 16:46:21
news-image

சர்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு மன்னாரில்...

2023-12-06 16:24:13
news-image

மூவரின் உயிரிழப்புக் காரணமான தனியார் பஸ்...

2023-12-06 16:17:51
news-image

தமிழர்களிற்கு சுயநிர்ணய உரிமை அவசியம் -...

2023-12-06 16:15:49
news-image

பரிசுப் பொருட்கள் மற்றும் கடன் வழங்குவதாக...

2023-12-06 16:42:40
news-image

ஹரக்கட்டாவின் மனுவை தள்ளுபடி செய்த மேன்முறையீட்டு...

2023-12-06 15:44:54
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2023-12-06 15:35:11
news-image

எட்கா குறித்த பேச்சுவார்த்தைகளை மார்ச்சில் நிறைவு...

2023-12-06 16:49:08
news-image

கடுகண்ணாவ வைத்தியசாலையில் சுவரொன்று வீழ்ந்து பணியாளர்...

2023-12-06 15:18:09
news-image

கொழும்பு பாதுகாப்பு பேரவை உடன்படிக்கையில் கையெழுத்திட...

2023-12-06 15:09:10
news-image

நாணய நிதியத்திடமிருந்து இரண்டாம் கட்ட கடன்...

2023-12-06 16:48:26