சர்வதேச நாணயநிதியத்தில் சீனாவிற்கு அதிகளவு வாக்களிக்கும் உரிமையை வழங்கவேண்டும் என அதன் தலைவர் கிறிஸ்டினா ஜோர்ஜீவா கருத்து தெரிவித்துள்ளார்.
சீனாவிற்கு அதிகளவுவாக்களிப்பு உரிமையை வழங்கும் சீர்திருத்தங்களிற்கு ஆதரவளித்துள்ள அவர் நெருக்கடியில் சிக்குண்டுள்ள நாடுகளி;ற்கு உதவுவதற்கான நிதி சர்வதேச நாணயநிதியத்திடம் இல்லாத நிலை தொடருமென்றால் பேரழிவு ஏற்படு;ம் என எச்சரித்துள்ளார்.
பினான்சியல் டைம்சிற்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள கிறிஸ்டலினா ஜோர்ஜீவா சீனாவின் எழுச்சி உட்பட கடந்த தசாப்தத்தில் உலக பொருளாதார ஏற்பட்டுள்ள மாற்றங்களை சர்வதேச நாணயநிதியம் உள்வாங்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
உலகப்பொருளாதாரம் எவ்வாறு மாறுகின்றது என்பதை பிரதிபலிக்க தொடர்ந்தும் மாறவேண்டிய தேவை உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
சீனா உலகபொருளாதாரத்தில் வலுவாக உள்ளதையும் ஆனால் சர்வதேச நாணயநிதியத்தில் அதன் வாக்களிப்பு வீதம் குறைவாக உள்ளதையுமே அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணயநிதியத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொருநாடும் உலகபொருளாதாரத்தில் அதன்நிலையின் அடிப்படையில் ஒதுக்கீடு என்பதை கொண்டுள்ளது.
இது சர்வதேச நாணயநிதியத்திற்கான அதன் பங்களிப்புகள் அந்த அமைப்பில் அதற்கான வாக்களிப்பின் பலம் ஆகியவற்றை இது தீர்மானிக்கி;ன்றது.
ஜப்பானை விட சீனா உலகபொருளாதாரத்தில் அதிக வலுவான நிலையில் உள்ள போதிலும் சர்வதேச நாணயத்திற்குள் அதன் வாக்குரிமை குறைவானதாகவே காணப்படுகின்றது,
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM