வேகக் கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி ஒன்று வீட்டு வளவுக்குள் புகுந்து விபத்திற்குள்ளாகியுள்ளானதில் சாரதி மற்றும் வீட்டில் இருந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

மட்டக்களப்பு, இருதயபுர சந்தியில் உள்ள பஸ்தரிப்பிடத்திற்கு முன்பாக உள்ள வீட்டின் சுற்று மதிலை உடைத்துக்கொண்டு குறித்த பாரவூர்தி வீட்டு வளவுக்குள் புகுந்துள்ளது.

இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்தில் அருகில் இருந்த மின்கம்பம் ஒன்று சேதமடைந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.