சுந்தர் சி நடிக்கும் 'ஒன் 2 ஒன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

03 Oct, 2023 | 03:19 PM
image

இயக்குநரும், நடிகருமான சுந்தர் .சி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ஒன் 2 ஒன்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

பரமபதம் எனும் படத்தை இயக்கிய இயக்குநர் கே. திருஞானம் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'ஒன் 2 ஒன்'. இதில் சுந்தர் .சி, பொலிவுட் இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப், விஜய் வர்மன், நீது சந்திரா, ராகினி திரிவேதி, பேபி மானஸ்வி, ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ் கே ஏ‌ பூபதி கார்த்திக் -பிரவீன் நித்தியானந்தம்- விக்ரம் மோகன் ஆகிய மூவர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். பரபர திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 24 ஹவர்ஸ் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்நிலையில் தற்போது எதிரும் புதிருமாக நடித்திருக்கும் சுந்தர் சி மற்றும் அனுராக் காஷ்யப் ஆகியோர்களின் தோற்ற புகைப்படம் ஃபர்ஸ்ட் லுக்காக வெளியிடப்பட்டிருக்கிறது. விரைவில் இப்படத்தின் டீசர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right