மோசடி மூலம் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 100 மில்லியன் டொலருக்குமேல் பணம் சம்பாதித்தார் என சட்டத்தரணியொருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
டொனால்ட் டிரம்பிற்கு எதிரான சிவில் மோசடி விசாரணைகள் திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் சட்டத்தரணியொருவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
டிரம்பும் அவரது நிறுவனத்தை சேர்ந்தவர்களும்அதிகாரிகளும் அவரது இரண்டு மகன்களும் இந்த வழக்கில் நியுயோர்க் சுப்பீரியர் நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ள இந்த வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அவர்கள் மோசடியில் ஈடுபட்டனர் போலியான வர்த்தக ஆவணங்களை சமர்ப்பித்தனர் போலியான நிதி ஆவணங்களை சமர்ப்பித்தனர் மோசடி செய்தனர் என குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
டிரம்பின் வர்த்தக சாம்ராஜ்யத்தை ஆட்டம் காணச்செய்யக்கூடிய இந்த வழக்கில் ஆஜராகியுள்ள முன்னாள் ஜனாதிபதி நீதிபதியையும் சட்டத்தரணியையும் கடுமையாக சாடியுள்ளார்.
நீதிபதிக்கு வெளியே கருத்து தெரிவித்துள்ளடிரம்ப் நீதிபதியை முரடர் என வர்ணித்துள்ளார்.
இது மோசடி இது ஏமாற்றுவித்தை உங்களிற்கு தெரியும் எனது நிதிநிலை அறிக்கைகள் தனித்துவமானவை என டிரம்;ப் தெரிவித்துள்ளார்.
ஒரு குற்றமும் இல்லை எனக்கு எதிராகவே குற்றம் இடம்பெறுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM