பொங்கலுக்கு வெளியாகும் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'லால் சலாம்'

03 Oct, 2023 | 03:19 PM
image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் 'லால் சலாம்' எனும் திரைப்படம் எதிர்வரும் பொங்கல் திருநாள் தினத்தன்று பட மாளிகைகளில் வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

இயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'லால் சலாம்' இதில் விக்ராந்த், விஷ்ணு விஷால், நிரோஷா, ஜீவிதா, செந்தில், தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'மொய்தீன் பாய்' எனும் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசைப்புயல்' ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார்.‌ இந்தத் திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரித்திருக்கிறார்.‌

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் அறிவித்திருக்கிறது. அந்த வகையில் இந்த திரைப்படம் 2024 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.‌

இதனிடையே இந்த திரைப்படம் உள்ளூர் துடுப்பாட்ட வீரர்களின் தொழில் சார்ந்த வாழ்வியலை மையப்படுத்தி தயாராகியிருக்கிறது என்பதும், முன்னாள் இந்திய துடுப்பாட்ட வேகப்பந்து பேச்சாளரான கபில் தேவ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார் என்பதும், இப்படத்தின் திரைக்கதை போலி என்கவுண்டர் ஒன்றை தழுவி தயாராகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right