கனடா தூதரக அதிகாரிகளை திரும்பப்பெற இந்தியா வலியுறுத்தியதாக தகவல்

03 Oct, 2023 | 04:31 PM
image

புதுடெல்லி: எதிர்வரும் 10 ஆம் திகதிக்குள் கனடா தனது தூதரக அதிகாரிகளை திரும்பப்பெற வேண்டும் என்று இந்தியா கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவைச் சேர்ந்த சீக்கியத் தலைவரான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஜூன் 18 ஆம் திகதி கனடாவில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டை முன்வைத்தார். கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது.

 மேலும், கனடாவில் உள்ள இந்திய தூதரை வெளியேற ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டார். இதற்கு எதிர்வினையாக இந்திய அரசுஇ இந்தியாவில் உள்ள கனடா நாட்டு தூதரக அதிகாரியை வெளியேற உத்தரவிட்டது. இதனாலேயே கனடாவுக்கு இந்தியாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அக்.10 க்குள் இந்தியாவில் இருக்கும் கனேடிய அதிகாரிகளை திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் அதற்கு பின்னர் இந்தியாவில் இருக்கும் அவர்களின் தூதரகப் பொறுப்புகள் நீக்கப்படும் என்று இந்தியா கூறியிருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்தியாவில் 62 கனேடிய அதிகாரிகள் உள்ளனர். அந்த எண்ணிக்கையை 41 ஆக குறைக்க வேண்டும் என்று இந்தியா கூறியதாக அந்த ஊடகச் செய்தி கூறியுள்ளது. இந்தக் கருத்து கூறித்து இந்திய மற்றும் கனேடிய வெளியுறவு அதிகாரிகள் உடனடியாக பதில் அளிக்கவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தான் மிருகக்காட்சிசாலையின் புலி கூட்டிலிருந்து ஆணின்...

2023-12-07 16:26:02
news-image

காசாவில் ஒக்டோபரில் இடம்பெற்ற தாக்குதலிற்கு இஸ்ரேல்...

2023-12-07 15:46:42
news-image

காசா மக்களை எதிரியின் கரங்களை நோக்கி...

2023-12-07 13:11:08
news-image

தந்தையை தேடிச் சென்ற மகன் மழை...

2023-12-07 12:31:49
news-image

எவரையும் இழக்காத எவரையும் காசாவில் கண்டுபிடிப்பது...

2023-12-07 12:17:16
news-image

வெள்ளத்தில் சிக்கித் தவித்த தம்மை காப்பாற்றிய...

2023-12-07 12:11:51
news-image

காலிஸ்தான் தீவிரவாதி மிரட்டல் எதிரொலி: இந்திய...

2023-12-07 11:31:21
news-image

ஹமாஸ் அமைப்பின் தலைவரின் வீட்டை சுற்றிவளைத்துள்ளோம்-...

2023-12-07 10:42:25
news-image

அமெரிக்காவின் நெவாடா பல்கலைகழகத்தில் துப்பாக்கி பிரயோகம்...

2023-12-07 05:58:17
news-image

புதுடில்லி அப்பலோ மருத்துவமனையில் சிறுநீரக மோசடி...

2023-12-06 13:07:37
news-image

2023 ஆம் ஆண்டுக்கான ஒக்ஸ்போர்ட் சொல்...

2023-12-06 15:28:35
news-image

பசு கோமியம் மாநிலங்களில்’ பாஜக வெற்றி:...

2023-12-06 12:15:02