இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சங்கரோ சவான் என்ற அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 24 நோயாளிகள் 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இதில் 12 பிறந்த குழந்தைகளும் 50 வயதுக்கு மேற்பட்ட 12 முதியவர்களும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த முதியவர்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாம்பு கடித்த காரணங்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர்.
மருந்துகள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் பற்றாக்குறையே இதற்கு காரணம் என வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.
இது குறித்து வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் கூறுகையில்,
பல்வேறு ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதால் பல சிரமங்களுக்கு ஆளானோம், வைத்தியசாலை 70 முதல் 80 கிலோ மீற்றர் சுற்றளவில் உள்ளது எனவே, நோயாளிகள் தொலைதூர இடங்களிலிருந்து வருகிறார்கள்.
நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது சிக்கலை உருவாக்குகிறது. நாங்கள் தனியார் நிறுவனத்திடமிருந்து மருந்துகளை பெற வேண்டும் ஆனால் மருந்துகள் கிடைக்கவில்லை. இருப்பினும் நாங்கள் உள்நாட்டில் மருந்துகளை வாங்கி நோயாளிகளுக்கு வழங்கினோம் என்று கூறினார்.
இச் சம்பவம் குறித்து மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கருத்து தெரிவிக்கையில்,
இந்த மரணங்கள் துரதிர்ஷ்டவசமானவை, வைத்தியசாலையில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
மரணங்கள் குறித்து விசாரணை நடத்த ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று மகாராஷ்டிராவின் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர் திலீப் மைசேகர் தெரிவித்தார்.
மொத்தம் 24 பேர் உயிரிழந்துள்ளனர். 70 பேர் இன்னும் கவலைக்கிடமாக உள்ளனர். மருத்துவ வசதிகள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. பல செவிலியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். பல இயந்திரங்கள் வேலை செய்யவில்லை. வைத்தியசாலையில் நோயாளர்களுக்கான பராமரிக்கும் திறன் 500, ஆனால் 1,200 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த திடீர் உயிரிழப்புகளைத் தொடர்ந்து வைத்தியசாலை நிர்வாகம் அனைத்து நோயாளிகளையும் அருகிலுள்ள ஏனைய வைத்தியசாலைகளில் அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM