பின்லாந்தில் அறிமுகமாகிறது உலகின் முதல் டிஜிட்டல் கடவுச்சீட்டு

03 Oct, 2023 | 02:45 PM
image

(கே.சுகுணா)

உலகில் முதன் முதலாக  டிஜிட்டல்  கடவுச்சீட்டு  பின்லாந்து அறிமுகம் செய்துள்ளது.

பின்ஏர், பின்னிஸ் பொலிஸ் மற்றும் பின்ஏவியா விமான நிலைய செயற்பாட்ட அதிகாரிகளுடன்  இணைந்து கடந்த ஆகஸ்ட் 28ஆம் திகதி டிஜிட்டல் கடவுசீட்டுக்கான திட்டத்தை பின்லாந்து அரசு தொடங்கியது.

பயண தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த டிஜிட்டல் கடவுசீட்டுகளை சோதிப்பதற்கான ஒரு மிகப்பெரிய ஐரோப்பிய ஒன்றியத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த திட்டம் அமைந்துள்ளது.

முதலில் இந்த திட்டம் ஹெல்சின்கியில் இருந்து இங்கிலாந்து திரும்பும் சில பின் ஏர் விமான பயணிகளிடம் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.

பின்டிசிசி  விமானி செயலியை பதிவிறக்கம் செய்து பயணிகள் தங்கள் முக அங்கீகாரம் மற்றும்  தரவுகளை சரிபார்க்க வேண்டும். பின்னர், பின்னிஸ் எல்லை பொலிஸாருக்கு செயலி மூலம் இந்த தகவல்களை அவர்கள் அனுப்ப வேண்டும்.

டிஜிட்டல்  கடவுசீட்டு என்பது மொபைல் செயலியை அடிப்படையாக கொண்டது. இது, பயணிகள் தங்கள் கடவுசீட்டு தகவல்களை ஸ்மார்ட் கைபேசியில் சேமித்து வைத்து, தேவையான இடங்களில் உடனடியாக பயன்படுத்திக்கொள்ள உதவுகிறது. தனியாக  கடவுச்சீட்டு புத்தகங்களை உடன் எடுத்துச் செல்ல தேவையில்லை.

எளிது, வேகம், பாதுகாப்பு ஆகிய மூன்று முக்கிய அம்சங்களை அடிப்படையாக கொண்ட டிஜிட்டல் கடவு சீட்டு திட்டம் சோதனை அடிப்படையில் பெப்ரவரி 2024 வரை செயல்படுத்தப்பட உள்ளது. அதன் பிறகு, இத்திட்டத்தில் உள்ள நிறை குறைகளை ஆராய்ந்து, நாடு முழுவதும் செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று பின்லாந்து தெரிவித்துள்ளது. ஸ்மார்ட் கைப்பேசி  பயன்பாடு அனைவருக்கும் அவசியமானதாக மாறியுள்ளதால் எதிர்காலத்தில் டிஜிட்டல்  கடவுச்சீட்டு எல்லா நாடுகளிலும் பிரபலமாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த செயற்திட்டம் வெற்றியளிக்கும் பட்சத்தில் உலகம் முழுவதுமே  விமான நிலையங்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பது தவிர்க்கப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தான் மிருகக்காட்சிசாலையின் புலி கூட்டிலிருந்து ஆணின்...

2023-12-07 16:26:02
news-image

காசாவில் ஒக்டோபரில் இடம்பெற்ற தாக்குதலிற்கு இஸ்ரேல்...

2023-12-07 15:46:42
news-image

காசா மக்களை எதிரியின் கரங்களை நோக்கி...

2023-12-07 13:11:08
news-image

தந்தையை தேடிச் சென்ற மகன் மழை...

2023-12-07 12:31:49
news-image

எவரையும் இழக்காத எவரையும் காசாவில் கண்டுபிடிப்பது...

2023-12-07 12:17:16
news-image

வெள்ளத்தில் சிக்கித் தவித்த தம்மை காப்பாற்றிய...

2023-12-07 12:11:51
news-image

காலிஸ்தான் தீவிரவாதி மிரட்டல் எதிரொலி: இந்திய...

2023-12-07 11:31:21
news-image

ஹமாஸ் அமைப்பின் தலைவரின் வீட்டை சுற்றிவளைத்துள்ளோம்-...

2023-12-07 10:42:25
news-image

அமெரிக்காவின் நெவாடா பல்கலைகழகத்தில் துப்பாக்கி பிரயோகம்...

2023-12-07 05:58:17
news-image

புதுடில்லி அப்பலோ மருத்துவமனையில் சிறுநீரக மோசடி...

2023-12-06 13:07:37
news-image

2023 ஆம் ஆண்டுக்கான ஒக்ஸ்போர்ட் சொல்...

2023-12-06 15:28:35
news-image

பசு கோமியம் மாநிலங்களில்’ பாஜக வெற்றி:...

2023-12-06 12:15:02