எம்முடைய இளம் தாய்மார்கள், தங்களுடைய பச்சிளம் குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது என்பது தனி திறன்மிக்க பணியாக இருக்கிறது.
குழந்தைகளின் சேட்டை.. உணவு உண்ண மறுப்பு.. விளையாடுவது.. அடம் பிடிப்பது.. என பல்வேறு காரணங்களால் குழந்தைகள் சரிவர உணவினை உண்பதில்லை. இதன் நான் கவலையடையும் தாய்மார்கள் மருத்துவரின் ஆலோசனை இன்றி தங்கள் குழந்தை மீது வலிந்து திணித்து உணவை புகட்டுகின்றனர்.
வேறு சில இளம் பெண்மணிகள் குழந்தைகளின் கவனத்தை திசை திருப்பி வீடியோ கேம்ஸ், யூடியூப், தொலைக்காட்சி கார்ட்டூன் சேனல்கள், செல்போன்... ஆகியவற்றை காண்பித்துக் கொண்டே உணவை ஊட்டுவார்கள். ஆனால் குழந்தைகளுக்கு உணவை வலிந்து புகட்டுவதும், திசை திருப்பி ஊட்டுவதும் தவறான உணவு பழக்கம் என மருத்துவர் நிபுணர்கள் எடுத்துரைக்கிறார்கள்.
பொதுவாக குழந்தைகள் பிறந்து ஒரு வருடத்திற்குள் உணவை பற்றிய அனைத்து விடயங்களையும் அறிந்து உணர்ந்து கொள்ளும். அதாவது உணவு பொருட்களை கடித்துப் பார்ப்பது, நுகர்ந்து பார்ப்பது, சுவைத்து பார்ப்பது.. என பல வழிகளில் உணவைப் பற்றிய விடயங்களை உள்வாங்கிக் கொண்டு பசிக்கும்போது உணவைப் பார்த்து உணவு தா..! என அவர்களாகவே கேட்பார்கள். கேட்கத் தொடங்குவார்கள்.
ஆனால் எம்முடைய தாய்மார்கள் தங்களுடைய பணிகளுக்கு இடையே அவசரம் அவசரமாக குழந்தைகளுக்கு உணவு ஊட்ட வேண்டும் என்ற கட்டாயத்தின் பெயரில் அவர்களுக்கு பிடிக்காத அல்லது அந்தத் தருணத்தில் பிடிக்காத உணவை ஊட்டினால்.. குழந்தைகளுக்கு உணவின் மீது இனம் புரியாத பயம் ஏற்படும். இதனால் அவர்களின் வயிற்றில் செரிமான கோளாறு ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டாகும்.
வேறு சில தாய்மார்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு உணவை மென்று சாப்பிட கற்றுத் தராமல், அதனை மிக்ஸியில் அரைத்தோ.. கூழாக ஆக்கியோ அதனை புகட்டுவர். இதனை அவர்கள் நான்கு வயது வரை தொடரவும் வாய்ப்பு இருக்கிறது. இத்தகைய குழந்தைகளுக்கு ஓரல் மோட்டார் பிரச்சனை என்ற பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும். அதாவது வாயில் உள்ள பற்கள், நாக்கு, உமிழ் நீர், கடித்தல், மெல்லுதல்.. போன்ற மோட்டார் பிரச்சனைகளில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கக்கூடும். இதனை உரிய தருணத்தில் துல்லியமாக அவதானித்து மருத்துவரிடம் காண்பித்து அவர்களின் ஆலோசனையும், சிகிச்சையையும் பெற வேண்டும்.
இதன் போது மருத்துவர்கள் உங்கள் குழந்தைகளின் ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகால உணவுப் பழக்க வழக்கத்தை துல்லியமாக அவதானித்து அவர்களுக்கு உணவு விளையாட்டு, உணவைப் பற்றிய பயத்தை அகற்றுதல், உணவை மென்று சாப்பிடுவதற்கான பயிற்சி போன்ற பிரத்தியேக பயிற்சிகளை அளித்து இத்தகைய பாதிப்பிலிருந்து முழுமையான நிவாரணத்தை வழங்குவர். அதன் பிறகு குழந்தைகள் தங்களது உணவு பழக்கத்தை நன்றாக மென்று சாப்பிட வேண்டும் என்பதனை உணர்ந்து பசியாற தொடங்குவார்கள். ஆரோக்கியமாகவும் வளரத் தொடங்குவார்கள்.
டொக்டர் வைஷ்ணவி
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM