கொவிட் வைரசுக்கு எதிரான எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசிகளுக்கு வழிவகுத்த இரு விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
எம்ஆர்என்ஏ தொழிநுட்பத்தை உருவாக்கிய பேராசிரியர்களான கட்டலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் ஆகியோரே இந்த பரிசைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
தொற்றுநோய் காலப்பகுதியில் குறித்த எம்ஆர்என்ஏ தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுகள் சோதனை கட்டத்திலேயே காணப்பட்ட போதும் தற்பொழுது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை கொவிட் -19 பரவலில் இருந்து பாதுகாக்க இந்த தொழிநுட்பம் வழி செய்துள்ளது.
இதேநேரம் இதே எம்ஆர்என்ஏ தொழில்நுட்பம் தற்போது புற்றுநோய் உள்ளிட்ட பிற நோய்களுக்கு எதிராக செயற்படுமா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முன்னோடியில்லாத ஒரு விடயத்தை ஆராய்ந்து குறித்த தொழிநுட்பத்தை கண்டறிந்து இந்த நவீன காலத்தில் மனித ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாக காணப்பட்ட விடயத்துக்கு பரிசு பெற்றவர்கள் பங்களித்துள்ளனர் என இது குறித்து நோபல் பரிசு குழு தெரிவித்துள்ளது.
அசல் வைரஸ் அல்லது பக்டீரியாவின் இறந்த அல்லது பலவீனமான பதிப்புகளை அடிப்படையாகக் கொண்டே பாரம்பரிய தடுப்பூசி தொழில்நுட்பம் காணப்பட்டது.
அதற்கு மாறாக, mRNA தடுப்பூசி மாறுபாடான அணுகுமுறையை கொண்டவை.
கொவிட் 19 பரவளின் போது உருவாக்கப்பட்ட, மொடர்னா, ஃபைசர்/பயோஎன்டெக் தடுப்பூசிகள் எம்.ஆர்.என்.ஏ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM