வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய ஏழாம் திருவிழாவான கப்பல் திருவிழா கடந்த சனிக்கிழமை (30) இடம்பெற்றது.
பகல் திருவிழாவினைத் தொடர்ந்து இரவு விஷேட மேளக் கச்சேரிகள் இடம்பெற்று, அதிகாலை வசந்த மண்டப பூசை, சுவாமி வீதியுலா, வடக்கு வீதியில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கப்பலாட்டும் வைபவம் என்பன இடம்பெற்றன.
இதன்போது கப்பல் திருவிழாவின் கதைகள் வாசிக்கப்பட்டு பாடப்பட்டு கப்பலாட்டும் வைபவம் இடம்பெற்றது.
நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலயக் கப்பல் திருவிழாவில் தென்னிந்திய பிரபல பாடகி நித்யஸ்ரீ குழுவினரின் இசை நிகழ்வும் இடம்பெற்றது.
அந்நியர்கள் நாகர்கோயில் பகுதிக்கு வந்து அங்குள்ளவர்களை பிடித்து கப்பலில் ஏற்றிச்செல்ல முற்பட்டபோது நாகதம்பிரான் கப்பலைத் தடுத்து அவ்வூர் மக்களை மீட்ட பழங்கதையை நினைவூட்டும் விதமாகவே இக்கப்பல் திருவிழா நடைபெறுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM