குமார் சுகுணா
தென்னாசிய நாடுகளில் ஒன்றான மாலைத்தீவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முகமது முய்சு வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அந்நாட்டின் புதிய ஜனாதிபதியாக எதிர்வரும் 17ஆம் திகதி முகமது முய்சு பதியேற்கவுள்ளார்.
இந்நிலையில் அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி இப்ராகிம் முகமது சோலி தனது தோல்வியை ஏற்றுக்கொண்டார்.
முகமது முய்சுவின் வெற்றி உலகளவில் அதிலும் குறிப்பாக ஆசியாவில் அதிலும் தென்னாசியாவில் மிகபெரிய பேசுப்போருளாக மாறியுள்ளது. இதற்கு காரணம் யாதெனில் முகமது முய்சு இந்தியாவிற்கு எதிராகவும் சீனா ஆதரவாலராகவும் பார்க்கப்படுகின்றமையே.
இந்த தேர்தலின்போது ஆட்சியில் இருந்த ஐனாதிபதி இப்ராஹிம் முகமது சோலிக் தமது உறவை இந்தியாவுடன் வலுப்படுத்தி இருந்ததோடு, அவர் இந்தியாவின் ஆதரவாளராக பார்க்கப்பட்டார். இப்ராஹிம் 2018ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் தொடர்ந்து இருந்து வருகிறார். இவர் தனது பதவிக்காலத்தில் 'இந்தியா முதலில்' அதாவது இந்தியாவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையை அமுல்படுத்தினார்.
ஆனால், முகமது முய்சு தலைநகர் மாலேயின் மேயராக இருந்த போதே தேர்தலில் போட்டியிட்டார். இவர் தனது தேர்தல் பிரசாரத்தில் 'இந்தியா அவுட்' அதாவது இந்தியாவை நாட்டைவிட்டு வெளியேற்றுவோம் என்ற முழக்கத்தை முன்வைத்திருந்தார். அது மட்டுமல்ல, ஐனாதிபதி இப்ராஹிம் இந்தியாவிற்கு அளவுக்கு அதிகமான இடத்தை கொடுத்து விட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
அத்தோடு இந்திய இராணுவம் மாலைத்தீவில் இருப்பது அதன்இறையாண்மைக்கு பங்கம் எனவும் தான் ஆட்சிக்கு வந்தால் இந்திய இராணுவத்தை திருப்பி அனுப்புவேன் என்றும் உறுதியளித்திருந்தார். இந்நிலையில் முகமது முய்சு வெற்றியை தனதாக்கியுள்ளார். முகமது முய்சுவுக்கு 54 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளன.
இந்தியாவிற்கும் மாலைத்தீவுக்கும் இடையே பன்னெடுங்காலமாக கலாசார பொருருளாதார ரீதியிலான உறவுகள் உள்ளன. மாலைத்தீவு நீண்ட காலமாக இந்தியாவின் செல்வாக்கின் கீழ் உள்ளது. மாலைத்தீவில் தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதன் மூலம், இந்தியப் பெருங்கடலின் பெரும் பகுதியில் இந்தியா தனது கண்காணிப்பை பராமரித்து வருவதாக நம்பப்படுகிறது.
கடந்த பத்து ஆண்டுகளில் மாலைத்தீவுக்கு இந்தியா இரண்டு ஹெலிகொப்டர்களையும் ஒரு சிறிய விமானத்தையும் வழங்கியுள்ளது. 75 இந்திய இராணுவ அதிகாரிகள் மாலைத்தீவில் வசித்து வருவதாகவும், இந்திய விமானங்களை இயக்கி பராமரிப்பதாகவும் 2021 ஆம் ஆண்டில் மாலைத்தீவு பாதுகாப்புப் படை கூறியது. அது மட்டும் அல்லாது இந்தியா கடன் உதவிகளையும் பல முதலீடுகளையும் மாலைத்தீவில் செய்துள்ளது.
இந்நிலையில் இந்திய பெருங்கடலில் சீனா தனது கடற்படையை வேகமாக விரிவுபடுத்தி வருகிறது. அதற்கிணங்க மாலைத்தீவில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சீனா ஏற்கனவே மாலைத்தீவின் உட்கட்டமைப்பு திட்டங்களில் பெருமளவு முதலீடு செய்துள்ளது. பல கோடி டொலர்களை மாலைத்தீவிற்கு கடனாக வழங்கியுள்ளது.
2016 ஆம் ஆண்டில் மாலைத்தீவு தனது தீவுகளில் ஒன்றை சீனாவிற்கு 50 ஆண்டுகளுக்கு வெறும் 4 மில்லியன் டொலர்களுக்கு குத்தகைக்கு அளித்தது. சீனாவின் 'வன் பெல்ட் வன் ரோடு' திட்டத்திற்கு மாலைத்தீவு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளது.வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் மாலைத்தீவு வழியாகவே செல்கிறது. இதனை பாதுகாக்கவும் சீனா விரும்புகிறது. ஆயினும் அங்கு சீனாவின் செல்வாக்கை கட்டுப்படுத்த இந்தியா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.
இலங்கையிலும் இதுபோல சீனா இந்தியா தலையீடு எந்தளவு உள்ளது என்பதனை நாம் அறிவோம். இந்தியா ஹெலிகொப்டர் கொடுத்தால் சீனா கப்பல் கொடுத்த நிகழ்வுகள் நம் நாட்டிலேயே நிகழ்ந்துள்ளன. இந்நிலையில் மாலைத்தீவிலும் அந்த போட்டி இருக்கத்தான் செய்யும் இந்நிலையில் சீனா சார்பான இந்தியாவிற்கு எதிரான மனநிலையை கொண்ட முகமதுமுஸ்சு அந்நாட்டின் ஜனாதிபதியாகின்றார். இது சீனாவிற்கு ஆதரவான நிலையே.
1978இல் பிறந்த முகமது முய்சு, இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் இருந்து சிவில் இன்ஜினியரிங் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். 2012 இல் அரசியலுக்கு வந்த அவர் அமைச்சரானார். மாலேயை சர்வதேச விமான நிலையத்துடன் இணைக்கும் 200 மில்லியன் டொலர் செலவிலான பாலம் உட்பட பல முக்கிய திட்டங்களை செயல்படுத்தினார். இந்த திட்டங்களில் சீன கடன் நிதி உதவி முக்கியம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
2021ஆம் ஆண்டில், அவர் மாலைத்தீவின் தலைநகரான மாலே மேயர் தேர்தலில் வெற்றி பெற்றார்; மாலே மேயரானார்.
தற்போது மாலைத்தீவின் ஐனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்றுவிட்டார். இது சீனாவிற்கு ஆதரவான நிகழ்வாக பார்க்கப்பட்டாலும் நிச்சயமாக இந்தியாவை மாலைத்தீவு முழமையாக பகைத்து கொள்ளாது என்றே கூறப்படுகின்றது. ஆனால் நிச்சயமாக இந்திய இராணுவம் வெளியேற்றப்படும். ஏனெனில், முகமது முய்சுவின் தேர்தல் பிரசார வாக்குறுதியே அதுதான்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM