யாழ். இளைஞன் மீது வாள்வெட்டு ; பட்டப்பகலில் பதைபதைக்க வைக்கும் சம்பவம்

Published By: Digital Desk 3

02 Oct, 2023 | 04:21 PM
image

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் இளைஞன் ஒருவரை வன்முறை கும்பல் ஒன்று வீதியில் துரத்தி துரத்தி வெட்டி காயப்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். 

சம்பவத்தில் நாயன்மார்கட்டு பகுதியைச் சேர்ந்த லக்சன் என்ற இளைஞனே படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

வீதியில் முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞனை பட்டா ரக வாகனத்தில் வந்த வன்முறை கும்பல் ஒன்று வழி மறித்து வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. 

தாக்குதலில் இருந்து தப்பிக்க , இளைஞன் முச்சக்கர வண்டியை கைவிட்டு வீதியில் ஓடிய போதிலும், துரத்தி துரத்தி வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. 

வீதியில் படுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட இளைஞனை வீதியில் சென்றவர்கள் மீட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

100 சதவீதம் பெண் ஊழியர்களைக் கொண்ட...

2025-01-13 16:42:13
news-image

கொழும்பில் களை கட்டிய பொங்கல் வியாபாரம்

2025-01-13 16:39:51
news-image

புதிய அரசாங்கம் ஏற்படுத்த முயலும் மாற்றத்துக்கு...

2025-01-13 13:19:36
news-image

புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவி துஷ்பிரயோகம் மூவர்...

2025-01-13 15:13:06
news-image

கிளிநொச்சியில் களைகட்டும் பொங்கல் வியாபாரம்

2025-01-13 15:06:59
news-image

பொலன்னறுவையில் பேஸ்புக் களியாட்டம் ; 10...

2025-01-13 13:26:48
news-image

யாழ். மருதங்கேணி நிதி நிறுவனத்தில் மோசடி...

2025-01-13 13:23:18
news-image

யாழில் 200 போதை மாத்திரைகளுடன் இரு...

2025-01-13 13:20:30
news-image

ஊடகவியலாளர்களிற்கு எதிரான வன்முறைகள் குறித்த விசாரணைகளை...

2025-01-13 13:18:54
news-image

வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ்...

2025-01-13 13:08:56
news-image

நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல்...

2025-01-13 13:05:18
news-image

மோட்டார் சைக்கிள் - இ.போ.ச பஸ்...

2025-01-13 12:42:49